எழுத்தாளரின் கருத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு

272
உலகம் முழுவதும் ஆண்கள் பெண்களை கற்பழிக்கும் செயலுக்கு தண்டனை விதிக்காமல் அதனை சட்டபூர்வமார்வமாக அனுமதிக்க வேண்டும் என பிரபல எழுத்தாளர் ஒருவரின் கோரிக்கைக்கு பலத்த எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.அமெரிக்க நாட்டை சேர்ந்த எழுத்தாளரான Daryush Valizadeh(36) என்பவர் தான் இந்த கோரிக்கையை முன் மொழிந்துள்ளார்.

’ஆண்கள் பெண்கள் மீது வன்முறையை பிரயோகித்து அவர்களை கற்பழிப்பதை தவிர்த்து இந்த செயலை சட்டப்பூர்வமாக அறிவித்தால், பெண்கள் தங்களுடைய உடலை பாதுகாத்துக்கொள்வதுடன் பணத்தையும் விலைமதிப்பில்லாத பொருட்களையும் பாதுகாக்கலாம்.

மேலும், போதை மருந்துக்களை எடுத்துக்கொண்டு அறிமுகம் இல்லாத நபரிடம் விலைமாதுவாக பெண்கள் செல்வதையும் தடுக்கலாம். இதன் மூலம், கற்பழிப்பு குற்றத்திற்காக ஆண்கள் கைது செய்யப்படுவது குறைக்கப்படும் என அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

இதனை உலக அரசுகளுக்கு வலியுறுத்தும் வகையில், அமெரிக்கா, பிரித்தானியா, கனடா, அவுஸ்ரேலியா, சிங்கப்பூர், ஜேர்மனி உள்ளிட்ட 43 நாடுகளில் உள்ள 165 நகரங்களில் எதிர்வரும் சனிக்கிழமை அன்று விவாத கூட்டங்கள் நடத்த முடிவு செய்திருந்தார்.

ஆனால், எழுத்தாளரின் இந்த கூட்டத்திற்கு பல நாடுகளில் உள்ள பெண்கள் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

‘எழுத்தாளரின் இந்த கருத்து பெண்களை அடிமைகளாகவும், பாலியல் எந்திரங்களாகவும் பார்ப்பது போன்று உள்ளது. 43 நாடுகளில் ஆயிரக்கணக்கான ஆண்கள் இதற்கு ஆதரவு தெரிவித்து விவாத கூட்டங்களில் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியானது.

ஆனால், இந்த கூட்டங்களுக்கு எதிராக பெண்கள் அமைப்புகள் திரண்டு போராடுவோம் என தெரிவித்துள்ளனர்.

உலகம் முழுவதும் பெண்கள் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால், எழுத்தாளரான அவர் அவசரமாக கூட்டங்களை ரத்து செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

SHARE