ஏகன் கிளாசிக் டென்னிஸ்: சானியா மிர்சா- கேசே டெல்லக்வா ஜோடி முதல் சுற்றிலேயே வெளியேற்றம்

326
இந்திய- ஆஸ்திரேலிய ஜோடியான சானியா மிர்சா- கேசே டெல்லக்வா ‘ஏகன் கிளாசிக் டென்னிஸ்’ தொடரின் முதல் சுற்றிலேயே தோல்வியடைந்து வெளியேறியது.

இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் மகளிருக்கான ஏகன் கிளாசிக் புல்தரை டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா- கேசே டெல்லக்வா ஜோடி முதல் சுற்றில் சீனா-சீன தைபே ஜோடியான ஜி செங்-யங் ஜன் சான் ஜோடியை எதிர்கொண்டது.

தரநிலையில் முதலிடத்தில் உள்ள சானியா ஜோடி, மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள சீனா-சினா தைபே ஜோடியின் சர்வீஸ்களை முறியடிக்க முடியாமல் தடுமாறியது. இறுதியில் 4-6, 2-6 என்ற செட்கணக்கில் தோல்வியடைந்து வெளியேறியது

SHARE