ஏனைய மதகுருமார்களை போன்று இந்துமத குருமாரையும் கௌரவமாக நடத்த வேண்டும் பொலிஸாரிடம் தொண்டமான் சீற்றம்

638

 

 கொட்டகலை ஸ்ரீ முத்துவினாயகர் ஆலய மதகுருவை லிந்துலை பொலிஸ் நிலைத்திற்கு அழைத்து விசாரணை செய்யப்பட்டதையடுத்து  அடுத்து திம்புள்ள பத்தனை பொலிஸ் நிலையத்திற்கு விரைந்த தொண்டமான் அனியினரால்  பத்தனையில் பதற்ற நிலை தோன்றியது
unnamed (1) unnamed (2) unnamed (3) unnamed (4)

20.08.2016 மாலை திடீரென பொலிஸ் நிலையத்திற்கு விரைந்த முன்னால் அமைச்சர் தொண்டமான் உள்ளிட்ட இ.தோ.கா குழுவினரால் பத்தனை பொலிஸ் நிலையத்திற்கு படையெடுத்தனர்

கடந்த 8.8.2016 அன்று கொட்டகலை நகரில் தமிழ் முற்போக்கு கூட்டனியினரின் விளம்பர பலகை இனம் தெரியாதோரால் சேதமாக்கப்பட்டதையடுத்து கூட்டனியினரல் திம்புள்ள பத்தனை பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்யப்பட்டது முறைபாட்டையடுத்து விசாரணையை முன்னெடுத்த பொலிஸார் கொட்டகலை ஸ்ரீ முத்துவினாயகர் ஆலய குருக்கல் அவர் களை  பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து விசாரணைகளை மேற்கொண்ட நிலையில் தனக்கு விளம்பர பலகை உடைப்பு தொடர்பில் எதுவும் தெரியாது என தெரிவித்தபோதும் இரண்டவது தடைவையாகவும் பொலிஸ் நிலையத்திற்கு குறித்த மதகுருவை அழைத்துள்ளனர்

தனக்கு அவமானம் ஏற்பட்டுள்ளதாக இ.தோ.கா வின் தலைவர் முத்து சிவலிங்கம் அவர்களிடம் மதகுரு முறைபாடு தெரிவித்ததையடுத்தே முன்னால் அமைச்சர் தொண்டமான் பாராளுமன்ற உறுப்பினர் முத்து சிவலிங்கம் உள்ளிட்ட குழுவினர் பத்தனை பொலிஸ் நிலையத்திற்கு படையெடுத்துள்னர்

விசாரணை நிமித்தம் மதகுரு ஓருவரை பொலிஸ் நிலையத்திற்கு அழைப்பதை கண்டிப்பதாகவும் ஏனைய மதகுருமார்களை கௌரவித்து விகாரைகளுக்கு சென்று வாக்கு மூலம் எடுப்பது போல இந் மத குருமரிடமும் ஆலயங்களுக்கு சென்று விசாரணை முன்னெடுக்க வேண்டுமென தெரிவித்தனர்

பத்தனை பொலிஸ் நிலைய பொருப்பதிகாரி இல்லாதநிலையில் தலவாகலைபொலிஸ் அதிகாரியினலே நடந்த சம்பவம் தொடர்பில் மண்ணீப்பு கோருவதாகவும் சம்பவம் தொடர்பில் உரிய விசரணைகளை மேற்கொள்வதாகவும் தெரிவித்ததையடுத்து தொண்டமான் உள்ளிட்ட இ.தோ.கா குழுவினர் அங்கிருந்து சென்றனர்

நாட்டில் ஏனைய மத குருமார்களுக்கு வழங்கும் சம கௌரவம் இந்த மத குருமார்களுக்கும் வழங்கப்படவேண்டும் என இ.தோ.கா.வினர் தெரிவிக்கின்றனர்
விசாரணைகள் முன்னெடுக்கபடும் பட்சதத்தில் ஆலயத்திற்கு சென்று மதகுருவிடம் வாக்குமூலம் பெற வேண்டும் என பொலிஸாரிடம் வழியுருத்தப்பட்டது மேலும் மத்தியமகாணஅமைச்சர் ரமேஸ் மாகாணசபை உறுப்பினர்களான கணபதிகணகராஜ் உள்ளிட்டபலர் கலந்துகொண்டனரே

நோட்டன் நிரிட்ஜ் நிருபர் மு.இராமசந்திரன்

SHARE