ஸ்பெயின் நாட்டில் பெண் ஒருவர், வீட்டில் பெண் சிங்கத்தை வளர்ந்து வந்திருக்கிறார். ஆனால் இப்படி வனவிலங்குகளை உரிய அனுமதியின்றி வீட்டில் வைத்து வளர்ப்பது சட்டப்படி குற்றம் என்பது உலகெங்கும் பொதுவான விதி.
இந்த பெண் வீட்டில் சிங்கம் வளர்ப்பது அந்நாட்டு அரசுக்கு தெரிந்துவிட்டது. அதனால் வீட்டுக்கு வந்து ந்த சிங்கத்தையும் பிடித்து கொண்டு போய் மிருக காட்சி சாலை கூண்டில் அடைத்துவிட்டது அரசாங்கம். சிங்கத்தை பிரிந்து அந்த பெண்ணாலும் இருக்க முடியவில்லை. பெண்ணை பிரிந்து சிங்கத்தாலும் இருக்க முடியவில்லை.
துள்ளி குதித்து ஓட்டம்
இப்படியே ஏழு வருஷங்கள் போய்விட்டது. பிறகு ஒருநாள் அந்த பெண் தான் வளர்த்த சிங்கத்தை பார்க்க அனுமதி பெற்று அந்த மிருக காட்சி சாலைக்கு வருகிறார். சிங்கமோ கூண்டில் உள்ளது. அந்த பெண் உள்ளே நுழையும்போதே ஹலோ என்றுகூப்பிட தொடங்குகிறார். அந்த ஒத்தை வார்த்தையை கேட்டதும் சிங்கம் இங்குமங்கும் துள்ளி ஓடுகிறது.
உதட்டில் முத்தம்
“கேஷ்ஹயாங்ஷ்ருக்நியோஓஷ்” என்று பேசுகிறார். இதன் அர்த்தம் அந்த சிங்கத்துக்கு மட்டும்தான் தெரியும்போல. அப்படியே கூண்டுக்குள்ளிருந்தே அந்த பெண்ணை கட்டிப்பிடித்து உதட்டில் முத்தம் கொடுக்கிறது. இந்த பெண்ணும் அந்த சிங்கத்துக்கு முத்தமாக தருகிறார்.
தவிப்பில் புரளுகிறது
இரும்பு கம்பிகளுக்கிடையே தன் முரட்டு கைகளை வெளியே விடடு பெண்ணை இறுக்கி அணைத்து கொள்கிறது சிங்கம். பிறகு வெளியில் வர முடியாமல் அந்த பெண்ணிடம் முழுமையாக இருக்கவும் முடியாமல் தவிப்பில் தரையில் புரளுகிறது. இந்த வீடியோதான் வைரலாகி வருகிறது.
7 வருட பிணைப்பு
இவர்களுக்குள் இருந்த 7 வருட பிணைப்பு அதில் பளிச்சென தெரிகிறது. இந்த காட்சியை பார்க்கவே ஆச்சரியமாக உள்ளது. கட்டிப்போடும் அன்பு இருந்தால், கர்ஜிக்கும் சிங்கம் கூட கட்டுண்டு போய்விடும் என்பதற்கு உதாரணம்தான் இந்த வீடியோ!