ஐஎஸ் தீவிரவாதிகளின் தாயகமாக “இந்தோனேஷியா”?

293

 

ஐஎஸ் தீவிரவாதிகளின் தாயகமாக இந்தோனேஷியாவை மாற்ற முயற்சிகள் நடப்பதாக அவுஸ்திரேலியா எச்சரிக்கை விடுத்துள்ளது.சிரியா மற்றும் ஈராக்கின் பகுதிகளை கைப்பற்றி தங்களுக்கென்று தனி தேசத்தை உருவாக்கியுள்ள ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பல்வேறு அட்டூழியங்களை அரங்கேற்றி வருகிறது.

இந்நிலையில் மற்றொரு தாயகமாக இந்தோனேஷியாவை மாற்ற ஐஎஸ் முயற்சிப்பதாக அவுஸ்திரேலியா எச்சரித்துள்ளது.

அவுஸ்திரேலியா- இந்தோனேஷியா அமைச்சர்கள், பொலிஸ் உயரதிகாரிகள் கலந்து கொண்ட கூட்டத்திலேயே அவுஸ்திரேலிய அட்டர்னி ஜெனரல் ஜியார்ஜ் பிராண்டிஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், ஐஎஸ் அமைப்பு தனது கைக்கூலிகளை இந்தோனேஷியாவில் உருவாக்கி அதன் மூலமாக தாக்குதல்களை அதிகரித்து அந்த நாட்டை மற்றொரு தாயகமாக மாற்றும் நடவடிக்கைகளில் தீவிரம் காட்டுவதாக தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, ஏற்கனவே கடந்த 3 நாட்களாக ஜாவா பகுதியில் கடும் சோதனை நடத்தப்பட்டதில், சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் அதிக அளவில் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் தீவிரவாதிகளுடன் தொடர்புடைய ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதுதவிர ஜகார்த்தாவில் உள்ள ஷாப்பிங் மால்கள், பொலிஸ் நிலையம், சிறுபான்மையின மக்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததும் தெரியவந்துள்ளது.

SHARE