ஐக்கிய தேசியக்கட்சி எம்பிக்கு முதலமைச்சர், ஏனைய அமைச்சுக்கள் த.தே.கூட்டமைப்பிற்கு தண்டாயுதபாணியின் அலுவலகத்தில் மூடிய அறையில் மந்திர ஆலோசனை.

392

ஐக்கிய தேசியக்கட்சி எம்பிக்கு முதலமைச்சர், ஏனைய அமைச்சுக்கள் த.தே.கூட்டமைப்பிற்கு தண்டாயுதபாணியின் அலுவலகத்தில் மூடிய அறையில் மந்திர ஆலோசனை. அண்மைக்கால செயற்பாடுகள் கிழக்கு மாகாணசபையில் பாரிய மாற்றத்தினை ஏற்படுத்தி வருகின்றது அதனொரு கட்டமாககவே த.தே.கூட்டமைப்பினரினதும், ஐக்கியதேசியக்கட்சினரதும் பேச்சுவார்த்ததை என பரவலாக பேசப்படுகின்றது.

இதனை சாதகமாக பயன்படுத்த நினைக்கும் அம்பாறை மாவட்ட ஐக்கியதேசியக்கட்சியின் அமைப்பாளரும் கிழக்கு மாகாணசபையின் உறுப்பினருமான தயாகமகே த.தே.கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் சிலருடன் மூடிய அறையில் தண்டாயுதபாணியின் காரியாலயத்தில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருக்கின்றார்.

இது தொடர்பாக தெரியவருவதாவது.

கிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித்தலைவர் தண்டாயுதபாணியின் காரியாலயத்தில் ஐக்கியதேசியக்கட்சி கிழக்கு மாகாணசபை உறுப்பினருடன் த.தே.கூட்டமைப்பு உறுப்பினர்களான இலங்கை தமிழரசிக்கட்சியின் செயலாளர் நாயகமும் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் சட்டவல்லுனருமான கி.துரைராஜசிங்கம், இரா.துரைரெட்ணம், ஞா.கிருஸ்ணபிள்ளை(வெள்ளிமலை) கோ.கருணாகரம்(ஜனா) ஆகியோர் கலந்து கொண்டு மூடிய அறையினுள் பேச்சு வார்த்ததையில் ஈடுபட்டிருப்பது ஏனைய கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தயிருக்கின்றது.

கிழக்கு மாகாணசபையில் எதிர்காலத்தில் புதிதாக அமையயிருக்கும் மாகாணசபையில் முதலமைச்சர் பதவியினை பொறுப்பெடுக்கயிருக்கும் தயாகமகே கூறிய கருத்து என்னவெனில் நான் நான்கு பேரை அழைத்து வருகின்றேன் ஏனைய உங்களுடைய உறுப்பினர்களையும் வைத்து ஆட்சி அமைப்போம் என்ற கருத்தினை முன்வைத்திருக்கின்றார்.

இதில் மர்மம் என்னவென்றால் குறிப்பிட்ட கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் அழைக்கப்படவில்லை அதனடிப்படையில் திருமலை மாவட்ட கி.மா.சபை உறுப்பினர்களான ஜனார்த்தனன், நாகேஜ்வரன், மட்டக்களப்பு மாவட்ட கி.மா.சபை உறுப்பினர்களான நடராசா, பிரசன்னா, அம்பாறை மாவட்ட கி.மா.சபை உறுப்பினர்களான காலையரசன்,இராஜேஸ்வரன் ஆகியோர் இச்சந்திப்பில் அழைக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடததக்கது.

ஏனைய ஐந்து கி.மா.சபை உறுப்பினர்களும் இவர்களின் கண்களில் மண்ணைத்தூவிவிட்டு இச்சந்திற்பிற்கு போய் கலந்து கொண்டதன் மறுமம் என்னவென்று புரியாமல் மனமுடைந்த நிலையில் ஏனைய கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் காணப்படுகின்றார்கள்.

இவ்வாரான மாற்றுக்கட்சிகளுடன் சந்திப்புக்களை செய்யும் வேளையில் அனைத்து உறுப்பினர்களுக்கும் தெரியப்படுத்த வேண்டியது அவரது கடமையும் பொறுப்புமாகும் என்பதனை கருததில் எடுக்காமை கலந்து கொள்ளாத உறுப்பினர்களது ஆதங்கமாகவும் இருக்கின்றதனையும் காணமுடிகின்றது.

கிழக்கு மாகாண சபை அமர்வுகளின் செய்திப் பணிக்காக சென்றிருந்த எமது புலனாய்வு மற்றும் தேர்தல் கள விசேட செய்தியாளர் லசந்த கலபதி அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பில், மேற் குறிப்பிட்ட விடயத்தை சுட்டிக் காட்டியுள்ளதுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சக உறுப்பினர்களிடம் பாராபட்சம் காட்டுவதுடன் ஜனாதிபதித் தேர்தல் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மட்டத்தில் பாரிய சலசலப்பையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளதை கிழக்கு மாகாண அமர்வுகளில் அவதானிக்க கூடியதாக இருந்ததாகவும் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 

SHARE