ஐக்கிய தேசிய கட்சியில் இணைய தயாராகும் சுதந்திர கட்சியின் பிரபலங்கள்!

257

 

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பிரதிநிதித்துவம் செய்யும் மூன்று பிரபல கதாபாத்திரங்கள் தற்போது வரையில் ஐக்கிய தேசிய கட்சியில் உறுப்புரிமையை பெற்றுக்கொள்வதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வடமேல் மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அரசாங்கத்தின் பிரபல அமைச்சர் ஒருவர் இவர்களில் முக்கியமானவர் என தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த காலங்களில் அதிகமான வெளிநாட்டு விஜயங்களின் போது பிரதமருடன் இந்த அமைச்சர் இணைந்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

அவரது தொகுதியில் முன்னாள் ஜனாதிபதிக்கு அதிக ஆதரவு வழங்கும் பலர் உள்ளமை இந்த தீர்மானத்திற்கு காரணமாகியுள்ளதாக அதிகம் பேசப்படும் ஒரு விடயமாகியுள்ளது.

 

மற்றுமொரு பிரபல கதாபாத்திரம் ஐக்கிய தேசிய கட்சியுடன் தொடர்புபட்டு அரசாங்கம் கவிழ்வதற்கு ஆதரவு வழங்கிய மலையத்தை சேர்ந்த ஒருவராகும்.

கடந்த தேர்தலின் போது தோல்வியடைந்து தேசிய பட்டியலில் அமைச்சரவைக்கு சென்றுள்ளதோடு இன்று அமைச்சு பதவியில் செயற்படுக்கின்ற ஒருவர் இவ்வாறு கட்சி தாவுவதற்கு ஆயத்தமாகியுள்ளார்.

மூன்றாவது கதாபாத்திரம் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கொழும்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுகின்ற நிலையில் அவர் அரசியல் எதிர்காலம் தொடர்பில் உறுதியற்ற நிலைமையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

SHARE