ஐஸ்கிரீம் கேட்ட கர்ப்பிணி பெண்ணை சரமாரியாக தாக்கிய ஊழியர்கள்: நெஞ்சை பதற வைக்கும் அதிர்ச்சி சம்பவம்

278
அமெரிக்காவில் உள்ள அங்காடி ஒன்றில் ஐஸ்கிரீம் வாங்க சென்ற கர்ப்பிணி பெண்ணை அங்கு பணிபுரியும் ஊழியர்கள் சரமாரியாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நியூ மெக்சிகோ மாகாணத்தில் உள்ள Albuquerque என்ற நகரில் பிரபலமான Dairy Queen என்ற குளிர்பானங்கள் மற்றும் ஐஸ்கிரீம் விற்பனை செய்யும் அங்காடி அமைந்துள்ளது.இந்த அங்காடியில் கடந்த ஆகஸ்ட் மாதம் Angelika Coakley-Vargas என்ற 3 மாத கர்ப்பிணி பெண் ஒருவர் தன்னுடைய காதலனுடன் காரில் சென்றுள்ளார்.காரில் அமர்ந்தவாறு ஒரு குறிப்பிட்ட சுவையுடைய ஐஸ்கிரீமை ஆர்டர் செய்துள்ளார். அங்காடியில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் கர்ப்பிணி பெண் கேட்ட ஐஸ் கிரீமிற்கு பதிலாக வேறொரு ஐஸ் கிரீமை கொடுத்துள்ளார்.

ஏமாற்றம் அடைந்த அந்த கர்ப்பிணி காதலனை காரில் இருக்க சொல்லிவிட்டு அங்காடிக்குள் சென்றுள்ளார்.

அங்கு இருந்த ஊழியர்களிடம் தான் விரும்பிய ஐஸ்கிரீமை கேட்டுள்ளார். ஆனால், ஊழியர்கள் அவர் கேட்டதை இல்லை என கூறியுள்ளனர்.

பின்னர், தான் கொண்டு வந்த ஐஸ்கிரீமை அங்கு மேசை மீது தள்ளிவிட்டு விட்டு அங்கிருந்து நகர முயற்சித்துள்ளார்.

கர்ப்பிணி பெண்ணின் செயலால் ஆத்திரம் அடைந்த இரண்டு ஊழியர்கள் அவரை பின் தொடர்ந்து சரமாரியாக தாக்கியுள்ளனர்.

‘நான் கர்ப்பமாக இருக்கிறேன்….என்னை அடிக்காதீர்கள்’ என கதறி அழுதுள்ளார்.

ஆனால், கர்ப்பிணியின் கதறலை மதிக்காத இரண்டு ஊழியர்களும் அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

பின்னர், காருக்கு திரும்பிய அந்த கர்ப்பிணி பெண் நடந்தவற்றை காதலனிடம் தெரிவித்துள்ளார்.

கர்ப்பிணியான தனக்கு நேர்ந்த இந்த கொடுமைக்கு எதிராக அந்த் அங்காடி மீது வழக்கு தொடுக்க உள்ளதாக அந்த கர்ப்பிணி பெண் கூறியுள்ளார்.

SHARE