ஐ.எஸ் தீவிரவாதிகளை அழிக்க ரஷ்யா எடுத்துள்ள புது ஆயுதம் என்ன தெரியுமா?

319
ஐ.எஸ் தீவிரவாதிகளை அழிக்க ரஷ்ய ராணுவம் திறமை வாய்ந்த ’எலிகள் ராணுவ படையை’ தயார்படுத்தி வருவதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது.
ரஷ்யாவின் Rostov-on-Don நகர அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் இந்த திட்டத்தில் இரவு பகலாக உழைத்து வருகின்றனர்.

எலிகளுக்கு நுகரும் சகதி அதிகமாக உள்ளதால், அவற்றை ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான ராணுவத்தில் பயன்படுத்த ரஷ்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

எலிகளின் மூளையை இணைக்கும் ‘மைக்ரோசிப்’ ஒன்றை சிகிச்சையின் மூலம் தலைக்கு உள்ளே வைக்கப்படும்.

இதன் மூலம், எலிகளின் மூளை எவ்வாறு செயல்படுகிறது? தற்போது அது எதனை உணர்கிறது உள்ளிட்ட தகவல்களை அந்த எலிகளை இயக்கும் ராணுவ வீரர்களுக்கு தெரியவரும்.

எலிகள் அளவில் மோப்ப நாய்களை விட அளவு குறைவாக இருப்பதனால், அவை எதிரிகளின் எல்லைகளுக்குள் எளிதாக நுழைந்து விட முடியும்.

இதனால், ஆபத்தை ஏற்படுத்தும் கண்ணி வெடிகள், ஆயுதங்கள் எதிரே இருந்தால், அதனை எலிகள் தங்களுடைய நுகர்வு சக்தி மூலம் வீரர்களுக்கு தெரியப்படுத்தி எச்சரிக்கைப்படுத்தும்.

இதேபோன்று ஒரு மாபெரும் எலி ராணுவப்படையை உருவாக்கி எதிரிகளை வீழ்த்த முடியும் என ரஷ்ய விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர்.

எனினும், இதில் ஒரு சிக்கல் உள்ளது. எலிகளின் ஆயுட்காலம் ஒரு வருடம் என்பதால், அதற்கு குறைந்தது 3 மாதங்களில் ராணுவ பயிற்சி அளித்து தயார் படுத்த வேண்டும்.

அதே சமயம், இளமையான மற்றும் வயது முதிர்ந்த எலிகளையும் இந்த சோதனையில் ஈடுப்படுத்த முடியாது என விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

எதிரிகளை வீழ்த்த மட்டுமின்றி, உள்நாட்டு மக்களையும் இந்த பயிற்சி பெற்ற எலிகள் மூலம் காப்பாற்ற முடியும்.

அதாவது, உதாரணத்திற்காக பூகம்பம் ஏற்பட்டு இடிந்த கட்டடத்திற்குள் மக்கள் சிக்கிக்கொண்டால், சிதறிக்கிடக்கும் கற்களுக்கு இடையில் புகுந்து உள்ளே சென்று, அங்கு நபர்கள் உயிருடன் இருக்கிறார்களா என்பதை இந்த எலிகள் நுகர்வு சக்தி மூலம் மீட்பு குழுவினருக்கு தகவல் அளிக்கும்.

இந்த ஆய்வு வெற்றிகரமாக முடிவு பெற்றால், எதிரிகளை எளிதில் வீழ்த்தவும், இயற்கை சீற்றங்களில் சிக்கியவர்களை கண்டுபிடிக்கவும் இந்த பயிற்சி பெற்ற எலிகள் உதவும் என ரஷ்ய விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

SHARE