ஐ.எஸ் தீவிரவாதிகளை ஒழிக்க 34 நாடுகள் இணைந்த சூப்பர் ராணுவத்திற்கு இங்கிலாந்து உதவி

321

 

தீவிரவாதத்துக்கு எதிராக சவுதி அரேபியா போர்க்கொடி உயர்த்தி உள்ளது. ஏமனில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சவுதி அரேபியாவின் தலைமையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத், ஜோர்டான் உள்ளிட்ட 10 நாடுகளின் கூட்டுப்படைகள் தாக்குதல் நடத்திவருகின்றன.அதேபோல் ஈராக் மற்றும் சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்க கூட்டுப்படையில் இணைந்து சவுதி அரேபியா தாக்குதல் நடத்தி வருகிறது.

தீவிரவாதத்தை எதிர்த்து போராட சவுதி அரேபியாவின் தலைமையில் முஸ்லிம் மக்களை பெரும்பான்மையாக கொண்ட 34 நாடுகளின் படைகளை இணைத்து புதிய கூட்டுப்படையை நிறுவ திட்டமிடப்பட்டிருந்தது.

தற்போது இதற்கு அந்த 34 நாடுகளும் ஒப்புதல் அளித்துள்ளன. இந்த புதிய கூட்டுப்படையில் மாலி, மலேசியா, பாகிஸ்தான், லெபனான், எகிப்து மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட நாடுகள் சேருகின்றன.

ஐ.எஸ் தீவிரவாதிகளை அடியோடு ஒழிக்க தற்போது இந்த படைக்கு இங்கிலாந்து  உதவி செய்ய முன்வந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது

SHARE