ஐ.நா அலுவலகத்திற்கு முன்பாக குண்டுவெடிப்புக்களும் துப்பாக்கி பிரயோகங்களும்

280
இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் தொடர்ச்சியாக குண்டு வெடிப்புக்கள் மற்றும் துப்பாக்கி பிரயோகங்கள் இடம்பெற்று வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும், தற்போது துப்பாக்கிச்சூட்டுச் சத்தங்கள் தொடர்ச்சியாக கேட்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவத்தில் மூவர்  உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடக தகவல்கள் குறிப்பிடுகின்றன.

மேலும், இந்த குண்டு வெடிப்பானது இந்தோனேஷிய ஜனாதிபதி மாளிகைக்கும், அந்நாட்டு ஐ.நா அலுவலகங்கள் அருகே இடம்பெற்றுள்ளது.

அந்த நாட்டு பொலிஸாரின் தகவல்களின் அடிப்படையில், இந்த தாக்ககுதலின் பின்னால் பலமான ஒரு ஆயுதக்குழு இருப்பதாகவும், இதன்போது தற்கொலை குண்டுத் தாக்குதலும் நடாத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த தாக்குதலை கிளர்ச்சியாளர்கள் நடத்துவதாகவும் சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்த பகுதிகளில் வாழும் மக்களை முடிந்தவரை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் அந்நாட்டு பொலிஸ் உயர் அதிகாரி வலியுறுத்தியுள்ளார்.

SHARE