ஐ.நா சபைக்கு எதிராக போராட்டத்தில் குதிக்கும் பிரித்தானியா 

374
பிரித்தானியா நாட்டில் குடியேறும் அகதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என ஐ.நா சபை வலியுறுத்தியுள்ளதற்கு எதிராக பிரித்தானியா போராட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு குடியேற வந்த ஆயிரக்கணக்கான அகதிகள் கடலில் மூழ்கி இறந்ததை தொடர்ந்து, ஐரோப்பிய ஆணைக்குழு அதிரடியான திட்டங்களை ஐரோப்பிய உறுப்பு நாடுகளுக்கு வலியுறுத்தியுள்ளது.

இந்த திட்டங்களின் அடிப்படையில், ஐரோப்பிய நாடுகளுக்கு குடியேற வரும் அகதிகளுக்கு ஆதரவு அளித்து, அவர்களை குடியேற அனுமதி வழங்க வேண்டும் என உறுப்பினர் நாடுகளுக்கு ஐரோப்பிய ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.

மேலும் தற்போது அனுமதிக்கும் அகதிகளின் எண்ணிக்கையை கூடுதலாக அதிகரிக்க வேண்டும் என்றும் ஐரோப்பிய ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.

இந்த புதிய திட்டத்திற்கு ஐரோப்பிய உறுப்பினர் நாடுகளில் ஒன்றான ஜேர்மனி சம்மதம் தெரிவித்துள்ளது.

ஆனால், பிரித்தானியா ஐரோப்பிய ஆணைக்குழுவின் இப்புதிய அகதிகளுக்கான ஒதுக்கீடு திட்டங்களுக்கு எதிராக போராட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த புதிய திட்டங்களை நடைமுறை படுத்தினால், தற்போது பிரித்தானியாவில் ஒரு ஆண்டில் அனுமதிக்கப்படும் 30 ஆயிரம் அகதிகளின் எண்ணிக்கை இரட்டிப்பாக 60 ஆயிரம் என்ற அளவில் உயரும் என கவலை தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய உறுப்பினர் நாடுகளின் ஒட்டு மொத்த உற்பத்தி திறன், மக்கள் தொகை எண்ணிக்கை, வேலை வாய்ப்பின்மை மற்றும் அகதிகளை குடியேற்றிய முந்திய எண்ணிக்கையின் நிலவரம் உள்ளிட்ட அடிப்படை அம்சங்களை கொண்டு தங்கள் நாடுகளில் அகதிகளை குடியேற்ற ஐரோப்பிய ஆணைக்குழு வரையரை செய்துள்ளது.

இதன் அடிப்படையில், பிரித்தானியா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் தாராளமாக அதிக எண்ணிக்கையிலான அகதிகளை குடியேற அனுமதிக்கலாம்.

இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ஐரோப்பிய ஆணைக்குழு, அகதிகளுக்கான புதிய ஒதுக்கீடு குறித்த திட்டங்கள் பிரித்தானியாவிற்கு பொருந்தவில்லை என்றும், அதற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்துள்ளது.

பிரித்தானியா நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாகவே, ஐக்கிய நாடுகளின் சபையிலிருந்து வெளியேறுவது குறித்து 2017ம் ஆண்டு தீர்மானிக்கப்படும் என பிரதமர் டேவிட் கேமரூன் கூறியுருந்தார்.

தற்போது ஐரோப்பிய ஆணைக்குழு வலியுறுத்தியுள்ள அகதிகளுக்கான புதிய ஒதுக்கீடு திட்டங்கள் பிரித்தானியாவிற்கு ஏமாற்றம் அளிக்கும் விதத்தில் உள்ளதால், ஐக்கிய நாடுகளின் சபையிலிருந்து 2017ம் ஆண்டு உறுதியாக வெளியேறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

refugees_brittania_003

SHARE