ஐ.நா செயலாளரின் பாராட்டுக்கு பின்னால் மறைந்திருக்கும் ஆபத்து!

259

 

ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூனின் பாராட்டிற்கு பின்னால் பேராபத்து ஒன்று காத்திருப்பதாக கூட்டு எதிர்க்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.

அத்துடன், ஐ.நா உள்ளக தகவலின் பிரகாரம் யுத்தக்குற்ற விசாரணைக்காக நீதி சபையை ஆரம்பிப்பதற்கான ஆவணங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கெஹேலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு அவர் இதனை தெரிவித்துள்ளார். ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் லண்டனில் இடம்பெற்ற பாதுகாப்பு மாநாட்டில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் இலங்கை விஜயம் தொடர்பில் கருத்து தெரிவித்தார் .

இதன் போது இலங்கையின் தற்போதைய முன்னேற்றகரமான மாற்றங்களை வரவேற்றுள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்த போதே கெஹேலிய ரம்புக்வெல்ல இவ்வாறு கூறியுள்ளார்.

இந்நிலையில், ஐ.நா செயலாளரின் பதவி காலம் முடிவடைய இன்னும் 3 மாத காலம் இருக்கின்றது. எனவே, அவர் பதவி விலகுவதற்கு முன்னர் யுத்தக்குற்ற விசாரணை சபையை பரிந்துரை செய்வார்.

இதேவேளை, ஆழம் தெரியாமல் அரசாங்கம் மௌனித்து செல்வதாக பாராளுமன்ற உறுப்பினர் கெஹேலிய ரம்புக்வெல்ல மேலும் தெரிவித்துள்ளார்.

SHARE