ஐ.நா மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பில் அறிக்கைகள் சமர்ப்பிப்பு

429

 

இன்று ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனித உரிமைப் பேரவை அமர்வில் இலங்கைகுறித்து ஆராய பல அறிக்கைகள் சமர்ப்பிப்பு:

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 28 வது அமர்வு இன்று ஆரம்பமாகவுள்ள அதேவேளை இந்த அமர்வில் இலங்கை குறித்த ஆராய்வதற்காக பல மனித உரிமை அமைப்புகளும், அரசசார்பற்ற அமைப்புகளும் அறி;க்கைகளை சமர்ப்பித்துள்ளன.

சர்வதேச சட்டத்தரணிகள் சங்கம், சர்வதே மன்னிப்புச் சபை,மனித உரிமைகளுக்கான ஆசிய மன்றம் உட்பட பல அமைப்புகள் இலங்கை குறித்த அறிக்கைகளை சமர்ப்பித்துள்ளன. இலங்கையின் உள்நாட்டு யுத்தம் 2009 இல் முடிவடைந்த போதிலும்,இலங்கையின் மனித உரிமை பாதுகாப்பை மோதல் தொடர்பான விடயங்கள் பாதிப்பதாக சர்வதேச சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக முன்னாள் விடுதலைப்புலிகள் உறுப்பினர்களை சீர்திருத்தவென அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட திட்டம் குறித்து அந்த அமைப்பு கரிசனை வெளியிட்டுள்ளது. சர்வதேச மனித உரிமை சட்டங்கள் குறிப்பிடும் விதத்தில் தேசிய சட்டங்கள் மற்றும் கொள்கைகளை வகுப்பதன் மூலமாக இலங்கையின் புதிய அரசாங்கம் மனித உரிமைகளுக்கான தனது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தலாம் என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

2014 இல் இலங்கையில் மனித உரிமை ஆர்வலர்கள் கடும் நெருக்கடிகளை எதிர்கொண்டனர். இலங்கையின் புதிய அரசாங்கம் பத்திரிகையாளர்கள் மற்றும் மனித உரிமை பணியாளர்களுக்கு எதிரான கடந்தகால சம்பவங்கள் குறித்து விசாரிப்பதாக சாதகமான உறுதிமொழியை வழங்கியுள்ளதாக மனித உரிமைகளுக்கான ஆசிய மன்றம் தெரிவித்துள்ளது.

இந்த சாதகமான உறுதிமொழிகள் வழங்கப்பட்டுள்ள போதிலும் நாட்டில் காணப்படுகின்ற தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கும் கலாச்சாரம் முடிவிற்கு வருமா என்பதுதெரியவில்லை எனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவும், மனித உரிமை ஆணையாளர் அலுவலகமும் இலங்கையின் நிலவரத்தை உன்னிப்பாக அவதானிக்கவேண்டும்.தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கும் கலாச்சாரத்தை முடிவிற்கு கொண்டுவருமாறு அதனை கோரவெண்டும் எனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இலங்கையின் புதிய அரசாங்கம் அளித்துள்ள உத்தியோகபூர்வ வாக்குறுதிகளை வரவேற்றுள்ள சர்வதேச மன்னிப்புச்சபை  அரசாங்கம் இந்த வாக்குதிகளை செயற்பாடுகளாக மாற்றும் அதன் மூலம் இலங்கையில் ஓரு தசாப்த காலமாக சட்டத்தின் ஆட்சிக்கும்,மனித உரிமைகளுக்கும் ஏற்பட்ட பாதிப்பை சரிசெய்யும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
ஐ.நா மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பில் அறிக்கைகள் சமர்ப்பிப்பு

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பில் அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மனித உரிமை அமைப்புக்களும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் இவ்வாறு அறிக்கைகளை சமர்ப்பித்துள்ளன.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 28ம் அமர்வுகளில் இவ்வாறு அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

சர்வதேச சட்டத்தரணிகள் பேரவை, சர்வதேச மன்னிப்புச் சபை, மனித உரிமைக்கான ஆசிய அமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்புக்கள் இலங்கை தொடர்பில் அறிக்கைகளை சமர்ப்பித்துள்ளன.

2009ம் ஆண்டில் யுத்தம் நிறைவுக்குக் கொண்டு வரப்பட்டாலும், யுத்தம் தொடர்பிலான பிரச்சினைகள் குறித்து சுட்டிக்காட்டியுள்ளன.

குறிப்பாக முன்னாள் போராளிகள் புனர்வாழ்வு குறித்து சுட்டிக்காட்டியுள்ளன.

புதிய அரசாங்கம் மனித உரிமைகளை உறுதி செய்வதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாக சர்வதேச சட்டத்தரணிகள் பேரவை தெரிவித்துள்ளது.

சர்வதேச தர நிர்ணயங்களுக்கு அமைவாக மனித உரிமைகளை மேம்படுத்தக் கூடிய சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென தெரிவித்துள்ளது.

2014ம் ஆண்டிலும் மனித உரிமை ஆர்வலர்கள் பாதுகாவலர்கள் இலங்கையில் அழுத்தங்களை எதிர்நோக்கியதாக ஆசிய மனித உரிமைப் பேரவை சுட்டிக்காட்டியுள்ளது.

2015ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் பின்னர் சில சாதக மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கப்பட வேண்டியது அவசியமானது என சுட்டிக்காட்டியுள்ளது.

புதிய அரசாங்கத்தின் நடவடிக்கைகளை ஐக்கிய நாடுகள் மனித உரமைப் பேரவை உன்னிப்பாக அவதானிக்க வேண்டுமென தெரிவித்துள்ளது.

இதேவேளை, குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கப்படாத நிலைமை நீடிக்கக் கூடாது என சர்வதேச மன்னிப்புச் சபை கோரியுள்ளது.

மனித உரிமை சட்டம் ஒழுங்கு தொடர்பிலான பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளது.

SHARE