ஒன்றோடு ஒன்று இணைந்த வயிறு: மருத்துவர்கள் சாதனை

349
வயிறு ஓட்டி பிறந்த இரட்டை குழந்தைகளை சவுதி மருத்துவர்கள் அறுவை சிகிச்சையின் மூலம் வெற்றிகரமாய் பிரித்துள்ளனர்.ஏமன் நாட்டை சேர்ந்த தம்பதியினருக்கு சில மாதங்களுக்கு முன் வயிறு ஒட்டியபடி இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளது.

அப்துல்லா, அப்துல் ரகுமான்(Abdullah-Abdulrahman) என்று பெயரிடப்பட்ட அந்த இரட்டை ஆண் குழந்தைகளை அறுவை சிகிச்சை மூலம் பிரிப்பதற்காக, அவர்களின் பெற்றோர் சவுதிக்கு அழைத்து வந்துள்ளனர்.

இதன்பின் அந்நாட்டு சுகாதார அமைச்சர் அப்துல்லா-அல்-ரபியாவின்(Abdullah Al-Rabeeah) வழிகாட்டுதலின் படி, தலைநகர் ரியாத்தில்(Riyadh) உள்ள கிங் அப்துல் அசீஸ்(King Abdul Hasees)என்ற மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

சுமார் 9 மணி நேரமாக நடந்த இந்த அறுவை சிகிச்சையில், குழந்தைகளின் ஒட்டியிருந்த வயிறுகள், சிறுநீரக அமைப்புகள் மற்றும் இடுப்பு எலும்புகள் மிக கவனமாக பிரிக்கப்பட்டுள்ளன.

மேலும் வெற்றிகரமாக பிரிக்கப்பட்ட குழந்தைகள் இருவரும், தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

cojoined_twins_006

SHARE