ஒபாமாவின் செல்ல நாயை கடத்த வந்த மர்மநபர்: கைது செய்த பொலிஸ்

288

 

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் செல்ல நாயை கடத்த வந்த மர்மநபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, போர்ச்சுகல் நாட்டை சேர்ந்த “போ”, “சன்னி” ஆகிய இரண்டு நாய்களை வளர்த்து வருகிறார்.

வெள்ளை மாளிகையில் நடக்கும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் இந்த நாய்கள், ஒபாவின் குடும்ப உறுப்பினர்களில் ஒருவராக கருதப்பட்டு வருகிறது.

இந்நிலையில், அந்த நாய்களை கடத்த ஒரு ஆசாமி திட்டமிட்டு வாஷிங்டன் வந்திருப்பதாக அதிபரின் ரகசிய ஏஜென்டுகளுக்கு தகவல் கிடைத்ததையடுத்து.

சம்பந்தப்பட்ட ஹொட்டலில் அதிரடி சோதனை நடத்திய அதிகாரிகள், வடக்கு தகோடா மாகாணம் டிக்கின்சன் நகரை சேர்ந்த ஸ்காட் டி ஸ்டாகெர்ட் என்பவரை கைது செய்தனர்.

அவரிடம் விசாரித்ததில், ஒபாமாவின் நாயை கடத்துவதற்காக வந்ததை ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது.

மேலும், அந்நபரின் காரில் உரிமம் இல்லா 2 துப்பாக்கிகளை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர்.

மேலும், விசாரணையின் போது, ஸ்டாகெர்ட், தனது பெற்றோர் முன்னாள் ஜனாதிபதி ஜான் எப்.கென்னடி
-நடிகை மர்லின் மன்றோ என்றும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வாஷிங்டன் வந்ததாகவும் முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளான்.

இந்த சம்பவம் தொடர்பாக, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அந்நபரை எச்சரித்த நீதிபதிகள், அவனது கணுக்காலில் கண்காணிப்பு சாதனத்தை பொருத்தி விடுவிக்கும்படி உத்தரவிட்டுள்ளனர்.

SHARE