ஒருநாள் தொடரை வெல்வது யார்?: இங்கிலாந்து– ஆஸ்திரேலியா நாளை பலப்பரீட்சை

334

இங்கிலாந்து– ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 5–வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி மான் செஸ்டரில் நாளை (13–ந்தேதி) நடக்கிறது.

முதல் 2 ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவும், (59 ரன், 64 ரன்), 3–வது, 4–வது போட்டியில் இங்கிலாந்தும் (93 ரன், 3 விக்கெட்), வெற்றி பெற்றன. இதனால் தொடர் 2–2 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இதனால் நாளைய ஆட்டத்தில் வெல்லும் அணி தொடரை கைப்பற்றும். இரு அணிகளும் தொடரை கைப்பற்ற கடுமையாக போராடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இங்கிலாந்து அணி ஏற்கனவே ஆசஷ் டெஸ்ட் தொடரை 3–2 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது. மேலும் ஒரே ஒரு 20 ஓவர் போட்டியிலும் வெற்றி பெற்று இருந்தது.

SHARE