ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட்டுக்கும் இடம்: வலியுறுத்தும் ஐ.சி.சி

284
ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட் போட்டியை சேர்ப்பது குறித்து வலியுறுத்தியுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைமை நிர்வாகி தெரிவித்துள்ளார்.ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட் போட்டிகளையும் சேர்ப்பது குறித்து வலியுறுத்தியுள்ள சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்,

அதன் ஒருபகுதியாக போதுமான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்ந்து வருவதாக தெரிவித்துள்ளது.

சீனா மற்றும் தென் கொரியாவில் வைத்து நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் முதன்முறையாக டி20 கிரிக்கெட் சேர்த்துக்கொள்ளப்பட்டது.

ஆனால் ஒலிம்பிக்கில் சேர்த்துக்கொள்வதற்கான விவாதங்கள் மட்டுமே நடைபெற்று வந்துள்ளது.

இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைமை நிர்வாகி டேவிட் ரிச்சாட்சன் சமீபத்தில் சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் தலைவரை சந்தித்து இதுகுறித்து விவாதித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த விவகாரத்தில் ஐ.சி.சி. துணிச்சலுடன் செயல்படும் எனில் தேவையான அனைத்து சாத்தியக்கூறுகளையும் விவாதிக்க ஐ.ஒ.சி. தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும், இது அத்துணை எளிதானது அல்ல என தெரிவித்துள்ள ரிச்சாட்சன், அவர்களுக்கு தேவை கிரிக்கெட் அல்ல எனவும், டி20 போன்ற முக்கியமான வடிவமே போதுமானது என ஐ.ஒ.சி. தலைவர் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

SHARE