கங்குலியின் சாதனையை முறியடித்த கோஹ்லி

323

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இன்றைய ஒருநாள் போட்டியில், வீராட் கோஹ்லி சதமடித்து கங்குலியின் சாதனையை முறியடித்துள்ளார்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில், இந்திய அணி 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 299 ஓட்டங்கள் எடுத்துள்ளது.

இந்த போட்டியில் வீராட் கோஹ்லி 138 ஓட்டங்கள் எடுத்தார், இது அவரது 23வது சதமாகும்.

உலகளவில் சச்சின் 49 ஒருநாள் சதங்களுடன் முதலிடத்தில் உள்ளார், இவருக்கு அடுத்தபடியாக 22 சதங்களுடன் இருந்த கங்குலியின் சாதனையை கோஹ்லி முறியடித்துள்ளார்.

சச்சினுக்கு அடுத்தபடியாக ரிக்கி பொண்டிங் (30 சதங்கள்), ஜெயசூர்யா (28 சதங்கள்), குமார் சங்கக்காரா (25 சதங்கள்) உள்ளனர்.

SHARE