,கடந்தவாரம் கொழும்பில் பம்பலப்பிட்டிக் கடற்கரையில் பல்லாயிரக்ககணக்கான மக்கள் முன்னிலையில் மனோநிலை பாதிக்கப்பட்ட தமிழ் இளைஞர் ஒருவர் சீறிலங்காவின் பொலிஸ் அதிகாரி ஒருவர் சில சிங்களக் காடையர்கள் சிலருடன் சேர்ந்து கட்டைகளால் தாக்கி கடலில் தள்ளினர். இந்தல அராஜகத்தை சுற்றி நின்ற பார்த்த பல்லாயிரக்கணக்கான மக்களில் யாரும் தடுக்க முயற்சிக்கவில்லை.

405

 

,சாகடிக்கப்பட்ட சகோதரனுக்காக கண்ணீர் சிந்துங்கள் சிங்கள காடையர்களால் தமிழ் இளஞ்சனை அடித்து கொண்றார்கள்
உறவுகளே கண்ணீர் சிந்துங்கள் காரணம் கேளுங்கள் நாங்கள் தமிழர்கள் எத்தனை நாளைக்குத்தான் சிங்களவனின் கொடுங்கோல் ஆட்சியை பொறுப்பது

10884563_1669070646653224_600444597_n 10884979_1669070546653234_641428955_n (1) 10884979_1669070546653234_641428955_n 10893779_1669070596653229_1416808290_n 10893874_1669070673319888_1888792549_n

,கடந்தவாரம் கொழும்பில் பம்பலப்பிட்டிக் கடற்கரையில் பல்லாயிரக்ககணக்கான மக்கள் முன்னிலையில் மனோநிலை பாதிக்கப்பட்ட தமிழ் இளைஞர் ஒருவர் சீறிலங்காவின் பொலிஸ் அதிகாரி ஒருவர் சில சிங்களக் காடையர்கள் சிலருடன் சேர்ந்து கட்டைகளால் தாக்கி கடலில் தள்ளினர். இந்தல அராஜகத்தை சுற்றி நின்ற பார்த்த பல்லாயிரக்கணக்கான மக்களில் யாரும் தடுக்க முயற்சிக்கவில்லை. காரணம் இந்தக் கொடுமையைச் செய்தவர் சீறிலங்கா அரசின் நன்மதிப்பைப் பெற்ற ஒர் பொலிஸ் அதிகாரி என்பது மட்டுமல்ல, தாக்குதலுக்கு உள்ளானவர் ஒரு தமிழ் இளைஞர் என்பதாகும்,

சிங்களப் பேரினவாதிகளினால் சாகடிக்கப்பட்ட எம்சகோதரனே! இறக்கும்போது நீ எங்களை எல்லாம் எண்ணியிருப்பாயே! கோடிக்கணக்கான உலகெங்கும் கூடியிருந்தும், கும்பிட்டுக் கேட்டும் கூட கொட்டான் தடி கொண்டு தாக்கி தண்ணீரில்தள்ளி கோரமாகக் கொலை செய்யப்பட்ட அந்தக் கடைசி நேரத்தின்போது உன் அவலக்குரல் யாருக்கும் கேட்கவில்லையே! குணக்கேடு கெட்டவர்களிடம் கும்பிட்டுப்பார்தாயாமே? குலைநடுக்கம் கொள்கிறதே இதயம். ஐயோ என் இனிய உறவே இறக்கும்போது என்னவெல்லாம் நினைத்திருப்பாய்? இதற்கெல்லாம் காலதேவன் எப்படியும் கணக்கெழுதித் தீருவான். காசியப்பன் பரம்பரை கல்லறைக்குள் பெற்ற தந்தையையேஉயிருடன் வைத்துக்கட்டியவர்கள். இதுமட்டுமா செய்வார்கள்.

இதுவும் செய்வார்கள் இதற்கு மேலும்செய்வார்கள். ஆனால் என்றோ ஒருநாள் இவர்கள் எரிந்து சாம்பராவார்கள் அந்த நாள்வெகுதூரத்திலில்லை. ஆதிக்க வெறிகொண்ட பலரை அழித்து சாம்பராக்கிய காலம் இவர்களுக்கும் கணக்கெழுதித்தான் தீரும். ஆனாலும் கூட இன்றும் வாலிபிடித்து நிற்கும் வகையற்றவர்கள் பலர் எம்மிடையே இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களுக்குச் சொல்லுகிறேன் உங்களுக்கும் இதேபோன்ற ஓர் வக்கிரதண்டாயுதம் வகையாகக் காத்திருக்கின்றது மறந்துவிடாதீர்கள். ஆனாலும் இறந்துபோன சகோதரனுக்காக இரண்டுசொட்டுக் கண்ணீராவது விட்டீர்களா இரக்கமற்றவர்களே! தள்ளிநின்று தத்துவம் பேசுபவர்களே! என்ன செல்லப் போகின்றீர்கள் இந்தக்கொலைக்கு? எட்டிநின்று எள்ளிநகையாடுபவர்களே! என்ன தீர்ப்பு எழுதப் போகின்றீர்கள்.

என்னமௌனமாகிவிட்டீர்கள். மனம் மரத்துப்போய்விட்டதா.? இல்லை சுயநலத்தில் சொர்க்கத்தைக்காணுகின்றீர்களா? சொல்லுங்கள். நீங்கள் பேசமாட்டீர்கள். எங்களுக்குத் தெரியும். ஏனென்றால்உங்களிடம் மனிதநேயம் தோற்றுப்போய்விட்டது மட்டுமல்ல உங்களுக்குள்ளே இருந்த மனிதமும்மரணித்துப்போய்விட்டது. எங்களின் இனிய உடன்பிறப்பே!துடிதுடிக்க துன்புறுத்தி துரத்திவிட்டனரே ஆழ்கடலில் அமிழ்ந்துபோக.தள்ளிக் கொலைசெய்திருக்கின்றார் உந்தன் இழப்பினால் இதயம் இரத்திக்கண்ணீர் வடிக்கும் நேரத்தில்,உனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு அந்தப் பொல்லாதவர்கள் பதில் சொல்லியே தீரவேண்டும். அதுவரை சர்வதேச நீதிதேவதையின்கதவுகளைத் தட்டிக்கொண்டே இருப்போம். மீண்டும் நீ மலரப்போகும் தமிழீழத்தின் மைந்தனாகப் பிறப்பெடுக்க வேண்டும். அதனை நீ கண்ணாரக் காண வேண்டும். வருவாய் மீண்டு!வளம் பெறுவாய் நாளும்காத்திருப்போம் அந்த நாளுக்காய் எல்லையற்ற தமிழரின் இதயக்குமுறல்..

SHARE