கடற்கரையில் நடந்த சோசம் குழந்தைகள் உள்பட 34 பேரது சடலங்கள் கரை ஒதுங்கின

329

துருக்கியின் ஏஜியன் கடற்கரையில் குழந்தைகளின் உடல்கள் உட்பட 34 அகதிகளின் சடலங்கள் கரை ஒதுங்கி உள்ளன.

கிரீஸின் லெஸ்போஸை தீவினை அகதிகள் கடக்க முயன்றபோது அவர்கள் பயணம் செய்த படகு கவிழ்ந்ததால் இந்த துயரம் நேர்ந்ததாக துருக்கிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இன்று விடியற்காலையில் 24 பேர்களது உடல்கள் துருக்கியின் அய்வலிக் மாவட்ட கடற்கரையில் காணப்பட்டதாகவும் மேலும் 10 பேர்களின் உடல்கள் டிக்கிலி மாவட்ட கடற்கரையில் காணப்பட்டதாகவும் துருக்கிய கடலோர காவல்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் அய்வலிக் மாவட்ட கடலில் தத்தளித்துகொண்டிருந்தவர்களில் 12 பேரை கடலோர காவல்படையினர் உலங்கு வானூர்தியின் உதவியுடன் மீட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் புகுவதற்காக சிரியா முதலான நாடுகளில் இருந்து அதிகளவிலான அகதிகள் குளிரான காலநிலையிலும் ஆபத்து மிகுந்த கடல் பயணத்தினை தகுந்த பாதுகாப்பு இல்லாத படகுகளில் மேற்கொள்வதனால் அடிக்கடி இவ்வாறான விபத்துக்கள் ஏற்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

turkey

 

SHARE