கனடா மக்கள் பூகம்பத்தை எதிர்கொள்ள எந்தவேளையும் தயாராக இருக்குமாறு வேண்டுகோள் .

299

கனேடிய மக்கள் அனைவரும் பூகம்பத்தை எதிர்கொள்வதற்கு தயார் நிலையில் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வைத்துக்கொள்ள வேண்டும் என்று கனடாவின் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஸ்டீபன் பிலன்லீ வேண்டுகோள் விடுத்துள்ளார்.அண்மைக்கால ஆய்வின் படி, வான்கூவர் மாகாணத்தில் 7.3 ரிக்டர் அளவில் பூகம்பம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக அவசரகால மேலாண்மை அலுவலகம் தகவல் தெரிவித்திருந்தது.இந்நிலையிலேயே அமைச்சர் ஸ்டீபன் பிலன்லீ இந்த அறிவிப்பை மக்களுக்கு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கும்பொழுது, சமீபத்தில் ஏற்பட்ட சூறாவளி தான் வரவிருக்கும் பூகம்பத்தின் எச்சரிக்கையாக அமைந்துள்ளதால் மக்கள் அனைவரும் அதனை எதிர்க்கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்டும்.பூகம்பம் எந்நேரத்திலும்ஏற்படுவதற்கான வாய்புக்கள் இருக்கின்றன. எனவே அனைத்து மக்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

அவசரகால முதல் உதவி சாதனங்கள், 3 நாட்களுக்கு தேவையான குடிநீர், மின்சாரம் தடைப்பட்டால் அதற்குரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் உறவினர்கள், நண்பர்களுடன் தொடர்பு கொள்ளும் வகையில் ஏற்பாடுகளை முன்கூட்டியே தயார் நிலையில் வைத்துக்கொள்ளுமாறு அவர் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

 

SHARE