கனவு மெய்ப்பட்டது. சிறப்பாக நடந்து முடிந்த இருதயா பரதநாட்டிய நிகழ்ச்சி

295

625-500-560-350-160-300-053-800-748-160-70-2

பரதநாட்டிய கலையை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் முயற்சியை மேற்கொண்டுவரும் இருதயா நாட்டிய நிகழ்ச்சி கனடாவில் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது.

நிவேதா மூத்ததம்பி, கீர்த்தனா அருளானந்தராஜா, யழிகா மகேசுவரன் மற்றும் சிந்திய ஸ்ரீரங்கன் ஆகியோர் டொராண்டோவின் வளர்ந்து வரும் பரதநாட்டிய கலைஞர்கள்.

இவர்களின் கலை பயணத்தில் பிரபல கலைஞர்கள் ஸ்ரீ பார்வதி ரவி கண்டசாலா, மதுரை. ஆர். முரளிதரன், குச்சிப்புடி கலைஞர் உமா முரளிகிருஷ்ணா ஆகியோருடமிருந்து கற்றும் அவர்களுடன் இணைந்தும் பல நிகழ்ச்சிகளிலும் இவர்கள் பங்கேற்றுள்ளனர்.

2014ம் ஆண்டு இவர்கள் உட்பட 8 நடன கலைஞர்கள் இணைந்து, Magical- The Tales of Disney Princesses என்ற தொண்டு நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தியுள்ளனர். இது அவர்களின் வாழ்கையில் நிகழ்த்திய மிக பெரிய சாதனைகளில் ஒன்றாக கருப்படுகிறது.

கலை மேல் அவர்களுக்கு இருந்த ஆர்வம் மற்றும் காதல், சமூகத்தில் புகழ்பெற்ற இளம் நடன இயக்குனர்கள் மற்றும் ஆசிரியர்களாக திகழ உதவியுள்ளது.

இதன் ஒருபகுதியாக இவர்கள் நான்கு பேரும் இணைந்து Journey: A Glimpse Into Tamil Cinema என்ற தலைப்பில் தமிழ் சினிமாவை நாட்டிய நிகழ்ச்சியாக நடத்தியுள்ளனர்.

மட்டுமின்றி கனடாவில் அமைந்துள்ள புற்று நோய் அமைப்புக்கும் இலங்கை, கிளிநொச்சியில் அமைந்துள்ள மகாதேவ சுவாமிகள் சிறுவர்கள் இல்லத்திற்கும் என 20,000 டொலர் நிதியையும் திரட்டியுள்ளனர்.

இவர்களது கலை சேவைக்கும் தொண்டு நிறுவனங்களுக்கு நிதி சேகரிக்கும் பொருட்டும் உதவிய அனைவருக்கும் வளரும் இந்த நான்கு கலைஞர்கள் சார்பில் நன்றியை தெரிவித்துள்ளனர்.

SHARE