கம்ரான அக்மல் 53 பந்துகளில் சதம்

338

பாகிஸ்தான் அணியில் சில ஆண்டுகளுக்கு முன் தொடர்ந்து இடம்பிடித்திருந்தவர் விக்கெட் கீப்பர் கம்ரான் அக்மல். இவர் சிறப்பாக பேட்டிங் செய்யக்கூடியவர். ஆனால் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு அவர் சர்வதேச அணியில் இடம்பெறவில்லை.

தற்போது பாகிஸ்தான் நாட்டில் உள்ளூர் அணிகளுக்கு இடையிலான டி20 போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இன்று முல்தான் பிராந்தியம்- கராச்சி பிராந்தியம் ஒயிட்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற முல்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

இதில் தொடக்க வீரராக களம் இறங்கிய கம்ரான அக்மல் 53 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். அதன்பின்னர் 105 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். இதில் 12 பவுண்டரி, 4 சிக்சர்கள் அடங்கும். இவரது சதத்தால் முல்தான் அணி 185 ரன்கள் குவித்தது. பின்னர் விளையாடிய கராச்சி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் அடித்து 3 ரன்கள் வித்தியாசத்தில் பரிதாபமாக தோல்வியடைந்தது.

சிறப்பாக விளையாடி வரும் கம்ரான் அக்மல் கடந்த போட்டிகளில் முறையே 49, 60, 4, 51, 51, 1 ரன்கள் அடித்துள்ளார்.

பாகிஸ்தான் அணிக்காக இவர் 53 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 6 சதங்கள் உள்பட 2648 ரன்கள் சேர்த்துள்ளார். 154 ஒருநாள் போட்டியில் 3168 ரன்களும், 54 டி20 போட்டிகளில் 897 ரன்களும் சேர்ந்துள்ளார்.

SHARE