கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணனின் ஏற்பாட்டில் யாழ் உடுலில் மகளீர் கல்லூரி மாணவிகள் ஜனாதிபதியை சந்தித்தனர்

302

 

யாழ் உடுவில் மகளீர் கல்லூரியின் மாணவிகள் ஜனாதிபதி மைத்திரியால சிறிசேன அவர்களை “போதைபொருளில் இருந்து விடுமதலை பெற்ற தேசம்” என்ற போதை பொருள் ஒழிப்பு நிகழ்ச்சி திட்டத்தின் எட்டாவது கட்டம் யாழ்பாணத்தில் நடைபெற்ற போது இதற்கு பிரதம அதிதியாக கலந்து கொண்ட ஜனாதிபதி அவர்களை சந்தித்தனர்.
unnamed-5 unnamed-6 unnamed-7
இந்த பாடசாலை மாணவிகள் சந்திப்பு தொடர்பில் கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் அவர்களை தொடர்பு கொண்ட போது. யாழ் உடுவில் மகளீர் கல்லூரி ஒரு அமெரிக்க மிஷனரி பாடசாலையாகும் இதன் நிர்வாகத்தில் எங்களுக்கு நேரடியாக தலையிட முடியாவிட்டாலும் மாணவர்கள் என்ற ரீதியில் அவர்களின் பிரச்சனை குறித்து நான் இந்த நாட்டின் கல்வி இராஜாங்க தமிழ் அமைச்சர் என்ற ரிதியில் கவனம் எடுக்க வேண்டியது கட்டாயமானதாகும். இதற்காகவே இந்த பாடசாலையின் அதிபர் பிரச்சனைக்கு ஒரு சுமூகமான தீர்வை பெரும் நோக்கில் இந்த மாணவர்களும் பெற்றோர்களும் கேட்டுக் கொண்டதற்கு இனங்க ஜனாதிபதி அவர்களை மாணவிகள் சந்திப்பதற்கான ஏற்பாடுகளை மேற்க் கொண்டேன். இதற்கு பாராளுமன்ற உறுப்பினர் டக்லஸ் தேவானந்தாவின் ஒத்துழைப்பு கிடைத்தமை குறிப்பிடதக்கது. குருகிய காலத்தில் இந்த பாடசாலையில் ஏற்பட்டிருக்கும் பிரச்சனைக்கு இருபாளாருடன் ஒர் சுமுகாமான பேச்சுவார்ததையின் மூலம் தீர்வு எட்டபடும். இதனை யாரும் ஒரு அரசியலாகவே அல்லது வேரு ஒரு கண்ணோட்டத்திலே பார்க்க வேண்டாம.; எமது நாட்டின் மாணவ சமூகத்தை பாதுகாக்க வேண்டியது அனைவரினதும் கடமையாகும். இவர்களே நாட்டின் நாளைய தவைவர்கள்  என்று கூறினார்.
SHARE