காட்டிக் கொடுப்புக்கள் எங்களுக்கு ஒன்றும் புதிதல்ல என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச

416

காட்டிக் கொடுப்புக்கள் எங்களுக்கு ஒன்றும் புதிதல்ல என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

காட்டிக் கொடுப்பு என்பது இந்த நாட்டில் எல்லாக் காலங்களிலும் இடம்பெற்றதொன்றாகும்.

அது வரலாற்று ரீதியாக மறைந்து போகும் காரணியல்ல. ராஜசிங்க மன்னரின் ஆட்சிக் காலத்தில் எஹலபொல நிலமே துரோகம் இழைத்திருந்தார்.

பின்னர் அந்த எஹலபொல சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிட்டது.

எதிர்க்கட்சித் தலைவர் தனது எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பாதுகாத்துக்கொள்ள பலிக் கடா ஒன்றை தேடுகின்றார்.

கடந்த 2010ம் ஆண்டிலும் இவ்வாறான ஓர் பலிக்கடாவாக சரத் பொன்சேகா மாற்றப்பட்டார்.

சரத்பொன்சேகாவிற்கு தற்போது புத்தி ஏற்பட்டுள்ளது.

71oWGCm

அவரது அண்மைக்கால அறிக்கைகளின் மூலம் அந்த விடயம் அம்பலமாகியுள்ளது.

தற்போது பலிக்கடாவாக துடிக்கும் நபர் எதிர்வரும் ஏப்ரல் மே மாதமளவில் தெளிவு பெற்றுக்கொள்வார் என விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஆளும் கட்சியில் பிளவு ஏற்படப் போவதனையே விமல் வீரவன்சவின் கூற்று உணர்த்தி நிற்பதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

 

SHARE