காணாமல் போனவர்களுக்கு என்ன நடந்தது? – புளொட் சித்தார்த்தனை அருகில் வைத்துக் கொண்டு விக்னேஸ்வரன் கேள்வி

278

 

vicky-1யுத்தம் முடிந்த பின்பும் தமிழ் மக்களின் காணிகள் பறிக்கப்படுகிறது, பௌத்த மக்கள் வாழாத தமிழ் பிரதேசங்களில் புத்தர் சிலைகள் அமைக்கப்படுகிறது, வடக்கு மீனவர்களின் வாழ்வு சூறையாடப்படுகிறது, காணாமல் போனவர்களுக்கு என்ன நடந்தது என தெரியவில்லை. இதை கண்டித்தே இந்த பேரணி நடத்தப்படுவதாக வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற எழுக தமிழ் பேரணியில் பேசும் போது தெரிவித்தார்.

வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் காணாமல் போவதற்கு காரணமானவர்களில் ஒருவரான புளொட் தலைவர் சித்தார்த்தனை அருகில் வைத்துக்கொண்டு காணாமல் போனவர்களுக்கு என்ன நடந்தது என முதலமைச்சர் கேள்வி எழுப்பினார்.

14446083_1790964904519763_7105703854567229458_n 14440981_1790965077853079_7710555887804100287_n 14391011_1790964414519812_6106542915778335361_n-1

ஓற்றையாட்சியின் கீழ் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணமுடியாது என்றும் வடக்கு கிழக்கு இணைக்கப்பட்டு சுயாட்சி அதிகாரங்களின் கீழ் மட்டுமே தீர்வை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

கடந்த கால அரசியல் யாப்புக்களால் தமிழர்கள் பாதிக்கப்பட்டார்கள். எனவே அரசியல் யாப்புக்கள் திருத்தம் செய்யப்படும் போது தமிழர்களுக்கு அது பகிரங்கப்படுத்தப்பட வேண்டும், அவர்களின் கருத்துக்கள் அபிலாசைகள் உள்ளடக்கப்பட வேண்டும் என்றும் விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

இராணுவ ஆக்கிரமிப்பு தொடர்கிறது, சிங்கள குடியேற்றங்கள் தொடர்கின்றன, இந்நிலையில் இதற்கு கண்டனம் தெரிவிக்கத்தான் இந்த பேரணி என்றும் விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும், அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும், போர்க்குற்றங்களை விசாரிக்க சர்வதேச விசாரணை வேண்டும், போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தவே இந்த பேரணி என்பதை சம்பந்தப்பட்டவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

கருணா பிரிவுக்கும்!
எழுக தமிழ் நடத்தும் ஏற்பாட்டுக் குழு அங்கத்தினர்களுக்கும் என்ன வித்தியாசம் ?
புரிந்தவர் கூறுங்கள் , , , அறியாததை அறிவோம் !

SHARE