காம கொடூரன்

366

 

அமெரிக்காவில் பெற்ற தாயையே 7 ஆண்டுகளாக அவரது மகன் கற்பழித்து வந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மத்திய அமெரிக்காவின் டெக்சாஸ்(Texas) மாகாணத்தில் உள்ள ஹோன்டுராஸ் கவுண்டியில்(Andrews County) உள்ள கிராமத்தில் பேபியன் ஆல்வராடோ( Fabian Alvarado ) என்ற நபர் வசித்து வருகிறார்.

 போதைக்கு அடிமையான இவன், ஒரு நாள் முழுபோதையில் இருந்தபோது தன்னை பெற்ற தாய் என கூட பாராமல் அவரை கற்பழித்துள்ளான்.

இதேபோல் போதை தலைக்கேறும் போதெல்லாம் தன் தாயை கற்பழிப்பதை வாடிக்கையாக கொண்ட இவன், கடந்த 7 ஆண்டுகளாக கற்பழித்துள்ளான்.

இந்நிலையில் குடும்ப கவுரவம் கருதி, இத்தனை காலமும் இவ்விடயத்தை மூடி மறைத்து வந்த தாய், நேற்று இரவு இவன் அத்துமீறல் எல்லை கடந்துப் போனதால் பொலிசாரிடம் புகார் அளித்துள்ளார்.

இதனையடுத்து, அந்த காம வெறியனை கைது செய்த பொலிசார் அவனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE