காருடன் குளத்தில் மூழ்கிய 80 வயது முதியவர்: உயிருக்கு அஞ்சாமல் கூலாக சிகரெட் பிடித்த விநோத சம்பவம்.

336
பிரித்தானியாவில் தாறுமாறாக ஓடிய கார் ஒன்று குளத்தில் பாய்ந்து முழ்கிய நிலையிலும், அதில் பயணித்த 80 வயது முதியவர் உயிருக்கு அஞ்சாமல் கூலாக சிகரெட் பிடித்த சம்பவம் மீட்பு குழுவினரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.தெற்கு Yorkshire நகரை சேர்ந்த 80 வயது முதியவர் ஒருவர், கடந்த செவ்வாய் கிழமை அன்று மீன் பிடிப்பதற்காக தனது காரில் வெளியே சென்றுள்ளார்.சில கிலோ மீற்றர் தொலைவில் இருந்த Loxley என்ற பகுதியில் உள்ள குளம் ஒன்றில் மீன் பிடிக்க திட்டமிட்டுருந்தார்.

குளத்தை நோக்கி காரை செலுத்தியபோது, கட்டுப்பாட்டை இழந்த அந்த கார் குளத்தில் பாய்ந்து மூழ்க தொடங்கியுள்ளது.

ஆனால், இதனால் எந்த பதற்றமோ அச்சமோ அடையாத அந்த முதியவர் மீட்புக்குழுவினருக்கு தகவல் அளித்து விட்டு கூலாக காருக்கு உள்ளேயே அமர்ந்திருந்துள்ளார்.

இது மட்டுமில்லாமல், கார் 50 சதவிகிதம் தண்ணீருக்குள் மூழ்கிய நிலையில் கூட, எந்த பரபரப்பும் இல்லாமல் தன்னுடைய பைப் சிகரெட்டை எடுத்து கூலாக பற்ற வைத்து பிடித்துக்கொண்டு கரையில் இருந்த வயதான விவசாயி ஒருவரிடம் பேச்சு கொடுத்து கொண்டிருந்துள்ளார்.

சிறிது நேரத்தில் அங்கு மூட்பு குழுவினர்கள் வந்தபோது கார் 75 சதவிகிதம் தண்ணீரில் மூழ்கி இருந்தது. ஆனால், அதனுள் அமர்ந்திருந்த அந்த முதியவர் எந்த வித பய உணர்ச்சியும் காட்டாமல் அமைதியாக மீட்பு குழுவினரை பார்த்து புன்னகைத்துள்ளார்.

உடனடியாக காரையும், அந்த முதியவரையும் மீட்பு குழுவினர் கரைக்கு கொண்டு வந்தனர்.

முதியவரை சோதித்தபோது அவருக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை. மேலும், தண்ணீருக்குள் நீண்ட நேரம் இருந்தும் அவரது உடலில் குளிர்ச்சியால் ஏற்படும் படப்படப்பும் இல்லாததை கண்ட மீட்பு குழுவினர் அதிர்ச்சியும் ஆச்சர்யமும் அடைந்தனர்.

பின்னர், முதியவருக்கு வேறு ஆடைகளை கொடுத்த மீட்பு குழுவினர் அவரை மருத்துவ அவசர வாகனத்தில் ஏற்றி அவரது வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

SHARE