கார் ஓட்டும்போது நகத்தை கடித்த சாரதி: அதிரடியாக அபராதம் விதித்த போக்குவரத்து அதிகாரி

317
ஸ்பெயின் நாட்டில் கார் ஓட்டும் போது நகத்தை கடித்த ஒரு சாரதிக்கு அபராதம் விதிக்கப்பட்டது ஆச்சரியத்தை அளித்துள்ளது.
ஸ்பெயின் நாட்டில் கடந்த 7ம் திகதி சாரதி ஒருவர் காரில் சென்று கொண்டிருந்தார்.

அவர் பயணத்தின் போது நகத்தை கடித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவரை சலாமான்கா நகரத்தில் போக்குவரத்து பொலிஸ் அதிகாரி ஒருவர் தடுத்து நிறுத்தினர்.

மேலும் அவருக்கு 80 யூரோ அபராதமாக விதித்ததாக கூறப்படுகிறது. இது குறித்து பொலிஸ் அதிகாரி கூறுகையில், சாரதி சரியான முறையில் காரை ஓட்டவில்லை என்று கூறியுள்ளார்.

மேலும் காரை ஓட்டும்போது அவர் நகத்தை கடித்துகொண்டு இருந்தார், எனவே தான் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

இதேபோல் கடந்த மாதம் வண்டி ஓட்டிகொண்டிருக்கும்போது வாயால் சுயிங்கத்தின் கவரை பிரிப்பதற்கு முயற்சி செய்ததாக சாரதி ஒருவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

SHARE