கியூட்டாக மேக்கப் இல்லாமலும் வந்த ஜெனிலியா.

495

தமிழ்,தெலுங்கு, ஹிந்தி என தனது சுட்டி தனமான நடிப்பால் எல்லோர் மனதையும் கவர்ந்தவர் நடிகை ஜெனிலியா.

2012ம் ஆண்டு பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் தான் இவர் கர்ப்பமாக இருக்கிறார் என்ற செய்தியை அவர் கணவர் ரித்தேஷ் அறிவித்திருந்தார்.

சில காலம் சினிமா பக்கம் தலைகாட்டாமல் இருந்த ஜெனிலியா தனது கணவர் நடித்து சமீபத்தில் வெளிவந்த ‘ஏக் வில்லன்’ என்னும் பாலிவுட் படத்தின் ஸ்பெஷல் காட்சியைக் காண வந்திருந்தார்.

மற்ற நடிகைகளை எல்லாம் கேமரா முன் வருவது என்றாலே மேக்கப்போடு தான் வருவார்கள். ஆனால் ஜெனிலியா மேக்கப் எதுவும் இல்லாமல் மிகவும் சிம்பிளாக வந்திருந்தார்.

பல நடிகைகள் மேக்கப் போடாமல் வெளிவருவதை விரும்பமாட்டார்கள். ஆனால் ஜெனிலியா கொஞ்சம் கூட மேக்கப் எதுவும் போடாமல் வந்திருந்தார். மேலும் அவர் பார்க்கவும் சுட்டியாக காணப்பட்டார்.

SHARE