கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட ஏங்கிய பெண் ஊழியர்: இன்ப அதிர்ச்சி அளித்த சக ஊழியர்கள் (வீடியோ இணைப்பு)

345
கனடா நாட்டிற்கு வேலைக்காக சென்றிருந்த பெண் ஒருவர் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட தாய்நாட்டிற்கு திரும்ப முடியாமல் ஏங்கி தவித்தபோது, சக ஊழியர்கள் அவருக்கு இன்ப அதிர்ச்சியை அளித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஸ்கொட்லாந்து நாட்டை சேர்ந்த சூசி பெரி என்ற பெண் வறுமையின் காரணமாக கனடா நாட்டிற்கு வேலைக்காக சென்றுள்ளார்.

ரொறொன்ரோ நகரில் உள்ள மைல்ஸ்டோன் என்ற உணவகத்தில் சர்வராக பணி புரிந்து வந்துள்ளார்.

கனடா நாட்டிற்கு சென்று 10 வருடங்கள் ஆன நிலையிலும், விமான பயணச்சீட்டு எடுக்க பணம் இல்லாததால் அவரால் தாய்நாட்டிற்கு திரும்ப முடியவில்லை.

சில தினங்களுக்கு முன்னர் தன்னுடைய சக ஊழியர்களிடம் ‘பல கடந்த 10 ஆண்டுகளாக என்னுடைய குடும்பத்துடன் இணைந்து என்னால் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட முடியாமல் போய்விட்டது.

இந்த வருடமும் தன்னால் தாய்நாட்டிற்கு போக முடியாமா என தெரியவில்லை’’ என தன்னுடைய வேதனையை தெரிவித்துள்ளார்.

இதனை கேட்டு மனம் உருகிய சக ஊழியர்கள் சூசி பெரிக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என நினைத்து அனைவரிடமும் பணம் சேகரித்துள்ளனர்.

இது தொடர்பாக உணவகத்தின் உரிமையாளருக்கும் அவர்கள் தகவல் அளித்துள்ளனர். உரிமையாளரும் இதற்கு ஒப்புதல் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை அன்று ‘’நாளை நீங்கள் நேரமாக பணிக்கு வந்து விடுங்கள். நமது உணவகத்தின் முன்னேற்றம் குறித்து ஒரு கூட்டம் நடைபெறுகிறது’’ என உரிமையாளர் சூசி பெரியிடம் கூறியுள்ளார்.

அதேபோல், அடுத்த நாள் வெள்ளிக்கிழமை அவர் நேரமாக உணவகத்திற்கு வந்துள்ளார்.

அனைவருக்கும் சூசி உணவு பரிமாரிக்கொண்டு இருந்துள்ளார். அப்போது திடீரென ஊழியர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து சூசியை அழைத்து அவரிடம் தாய்நாட்டிற்கு செல்வதற்காக விமான பயணச்சீட்டை பரிசாக அளித்துள்ளனர்.

இதனை கண்டு இன்ப அதிர்ச்சி அடைந்த சூசி, பேச முடியாமல் ஆனந்த கண்ணீர் வடித்துள்ளார்.

10 வருடங்களுக்கு பிறகு தன்னுடைய குடும்பத்துடன் சேர்ந்து கிறிஸ்துமஸ் கொண்டாட இருப்பதை நினைத்தால் மிகவும் உற்சாகமாக இருக்கிறது.

இதனை சாத்தியமாக்கியை என்னுடைய சக ஊழியர்களுக்கு நன்றி தெரிவிப்பதாக’ அவர் உருக்கமாக பேசியுள்ளார்.

எதிர்வரும் டிசம்பர் 23ம் திகதி தாய்நாட்டிற்கு செல்லும் சூசி கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடி விட்டு ஜனவரி 7ம் திகதி கனடா நாட்டிற்கு திரும்பும் வகையில் அவருக்கு பயணச்சீட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

SHARE