கீரிஸில் அகதிகள் படகு விபத்து: கடலில் மூழ்கி 22 பேர் பலி

649
ஐரோப்பிய நாடுகளில் குடியேற விரும்பும் அகதிகளை ஏற்றிச் சென்ற இரு படகுகள் சாமோஸ் என்ற தீவிற்கு அப்பால் கடலில் மூழ்கியிருக்கின்றன.இந்த விபத்தில் 22 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்ததுடன், மேலும் பத்துப் பேர் காணாமல் போயிருப்பதாக கிரேக்க கரையோர காவற்படை அறிவித்துள்ளது. உயிரிழந்தவர்களில் 18 பேர் பெரியவர்கள், 4 பேர் குழந்தைகளும் அடங்கும்.

கடலில் தத்தளித்த சமயம் காப்பாற்றப்பட்ட 36 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். இவர்கள் அனைவரும் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது இதுவரை தெரியவில்லையென சீஎன்என் செய்தி வெளியிட்டுள்ளது.

ஒவ்வொரு வருடமும் ஆபிரிக்க, மத்திய கிழக்கு நாடுகளைச் சேர்ந்த அகதிகள் பாதுகாப்பற்ற படகுகள் மூலமாக ஆபிரிக்காவின் வடமுனையில் இருந்து இத்தாலி, கிரேக்கம், மோல்ரான முதலான நாடுகளுக்கு படையெடுப்பது வழக்கம்.

SHARE