குட்டி வெள்ளை மாளிகையாக “Air Force One” விமானம்

268
அமெரிக்க ஜனாதிபதிக்காக புதிய இரண்டு Air Force One விமானங்களை வடிவமைக்க பென்டகன் ஒப்புதல் அளித்துள்ள நிலையில் வேலைகள் படுதீவிரமாக நடந்து வருகிறது.அமெரிக்க ஜனாதிபதியான பராக் ஒபாமா உலக சுற்றுப்பயணத்திற்காக பிரத்யேகமான Air Force One என்ற விமானத்தை பயன்படுத்தி வருகிறார்.

கடந்த 1985ம் ஆண்டு ஜனாதிபதி ரொனால்ட் ரீகன் காலத்தில் ஓர்டர் செய்யப்பட்டு, 1990ம் ஆண்டு ஜார்ஜ் டபிள்யூ புஷ் காலத்தில் வழங்கப்பட்டது.

தற்போது 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில் புதிய இரண்டு விமானங்களை வடிவமைக்க பென்டகன் சமீபத்தில் ஒப்புதல் அளித்தது.

இதனையடுத்து போயிங் 747-8 என்ற விமானத்தையே Air Force One விமானமாக மாற்ற முடிவு செய்யப்பட்டு அதற்கான வேலைகளில் அமெரிக்க விமானப்படை மற்றும் போயிங் நிறுவன அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

Air Force One சிறப்பம்சங்கள்

* தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் போயிங் 747-200 ரக விமானம், 8 லட்சத்து 33 ஆயிரம் பவுண்ட் எடை கொண்டவை.

* ஒன்றரை லட்சம் பெட்ரோலை சேமித்து வைக்கலாம், இதன் மூலம் பாதியளவு உலகை சுற்றி வந்து விடலாம்.

* மணிக்கு 700 மைல் வேகத்தில் 45 ஆயிரம் அடி உயரத்தில் பறக்கும் திறன் கொண்டது.

* இதன் உள்ளே நட்சத்திர ஹோட்டல் போன்று வசதிகள் செய்யப்பட்டிருக்கும்.

* இதுதவிர சமையலறை, தனி மருத்துவ குழு வசதி, பறந்து கொண்டிருக்கும் போதே பெட்ரோல் நிரப்பும் வசதி உட்பட எதிரிகளின் ரேடாரில் சிக்காமல் தப்பித்துக் கொள்ளும் வசதியும் உள்ளது.

SHARE