கூட்டு எதிர்க்கட்சியினருக்கு வலைவீசும் மைத்திரி-ரணில்

270

 

கூட்டு எதிர்க்கட்சியில் இணைந்து செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களை தம்பக்கம் இழுப்பதற்காக ஐக்கிய தேசியக்கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் நடவடிக்கை ஒன்றை ஆரம்பித்துள்ளதாக தெரியவருகிறது.

ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து சென்று மகிந்த ராஜபக்ஸவுடன் இணைந்து கொண்டவர்கள் மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்ள தயாராகி வருவதாக கூறப்படுகிறது.

கட்சியில் இருந்து சென்ற இவர்கள் தொடர்பாக கடும் நிலைப்பாட்டில் இருந்து வந்த ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, அவர்களை மீண்டும் கட்சிக்குள் சேர்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக பேசப்படுகிறது.

இதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கைச்சின்னத்தை பலப்படுத்த இணையுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள கோரிக்கைக்கும் சாதகமான பதில்கள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், அடுத்த வரவு செலவுத் திட்ட விவாதத்தின் போது இரண்டு கட்சிகளும் தமது இந்த இலக்கை அடைய தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

SHARE