கெய்ரோவில் பிரமிட் அருகே குண்டுவெடிப்பு

302
கெய்ரோவில் பொலிஸ் சோதனையின் போது குண்டு வெடித்ததில் 9 பேர் பலியாகினர் மற்றும் 10 காயமடைந்துள்ளனர்.

எகிப்தில் ஜனாதிபதியாக இருந்த ஹொஸினி முபாரக்கை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்காக கடந்த 2011 ஆம் ஆண்டு மாபெரும் போராட்டம் நடைபெற்றது.

2011 புரட்சி என்று கூறப்படும் இதனை நினைவுக்கூருவதற்காக ஆண்டு தோறும் ஆர்ப்பாட்டம், பேரணி ஆகியவை நடத்தப்படுகின்றன.

இந்நிலையில் இந்தாண்டு எந்த அசம்பாவிதமும் நடந்துவிடக்கூடாது என்று பொலிசார் கெயிரோவின் காஸா பகுதியில் உள்ள கட்டிடங்களில் சோதனை நடத்தினர்.

அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் சோதனை நடத்தியபோது திடீரென குண்டு வெடித்தது.

இதில் 6 பொலிசார் உட்பட 9 பேர் பலியாகினர். மேலும்,10 காயமடைந்துள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி முகமது மோர்சியின் ஆதரவு அமைப்பான இஸ்லாமிய சகோதரத்துவ போராளிகள் அமைப்பு இந்த குண்டு வெடிப்புக்கு காரணமாக இருக்கலாம் என்று அந்நாட்டு உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

SHARE