கைதுசெய்யப்பட்ட விடுதலைப்புலிகளின் சாள்ஸ் அன்ரனி சிறப்பு படையணியின் முன்னாள் சிறப்பு தளபதி நகுலன் என அழைக்கப்படும் கணபதிப்பிள்ளை சிவமூர்த்தி அவர்கள் விடுதலைப்போராட்டம் தொடர்பாக வழங்கிய சிறப்பு செவ்வி…

298

யாழ்ப்பாணம் – நீர்வேலி தெற்கு பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சாள்ஸ் அன்ரனி சிறப்பு படையணியின் முன்னாள் சிறப்பு தளபதி தளபதி ஒருவர் சிவில் உடையில் வந்த அடையாளம் தெரியாத நபர்களால் விசாரணைகளுக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

இவர்  காலை விசாரணைகளுக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக அவரின் தந்தை தெரிவித்துள்ளார்.

சாள்ஸ் அன்ரனி சிறப்பு படையணியின் முன்னாள் சிறப்பு தளபதி நகுலன் என அழைக்கப்படும் கணபதிப்பிள்ளை சிவமூர்த்தி என்பவரே இவ்வாறு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

குறித்த நபரின் வீட்டிற்கு நேற்று திங்கட்கிழமை மாலை சென்ற அடையாளம் தெரியாத நபர்கள் அவர் தொடர்பில் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து இன்று காலை மீண்டும் அவரது வீட்டிற்குச் சிவில் உடையில் சென்ற நபர்கள், தோட்டத்தில் பணியில் ஈடுபட்டிருந்த அவரை விசாரணைகளுக்காக யாழ்ப்பாணத்திற்கு அவரின் தந்தையுடன் அழைத்துச் சென்றுள்ளனர்.

இந்நிலையிலேயே மேலதிக விசாரணைகளுக்காக கணபதிப்பிள்ளை சிவமூர்த்தியை கொழும்பிற்கு அனுப்பிவைப்பதாக சிவில் உடையில் சென்ற நபர்கள் அவரின் தந்தையிடம் தெரிவித்துள்ளனர்.

கணபதிப்பிள்ளை சிவமூர்த்தி திருமணம் முடித்து வாழ்ந்து வருவதுடன் அவர் ஒருபிள்ளையின் தந்தையென்பது குறிப்பிடத்தக்கது.

எனினும் அவர் புனர்வாழ்வு பெறவில்லையென தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ய அவரின் பெற்றோர்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

இதேவேளை, கடந்த ஞாயிற்றுக்கி்ழமை புனர்வாழ்வு பெற்று விடுதலை செய்யப்பட்ட முன்னாள் அம்பாறை மாவட்ட தளபதி ராம், வானொன்றில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கடத்திச் செல்லப்பட்ட நிலையில் தற்போது யங்கரவாத விசாரணைப் பிரிவில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இவ்வாறான சம்பவங்கள் புனர்வாழ்வு பெற்று விடுதலையான முன்னாள் போராளிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE