கையை காப்பாற்ற வயிற்றிற்குள் வைத்து தைத்த மருத்துவ அற்புதம்.

322

யு.எஸ்.- நவீன அறிவியல் அறுவை சிகிச்சை மூலம் 87வயதுடைய முதியவர் ஒருவரின் படு மோசமாக எரிந்த கையை வைத்தியர்கள் சரிப்படுத்தியுள்ளனர். இச்சம்பவம் ஹியுஸ்ரனில் உள்ள ஹியுஸ்ரன் மெதடிஸ்ட் வைத்தியசாலையில் நடநதுள்ளது.
இவரது பாதிக்கப்பட்ட கையை வயிற்றிற்குள் வைத்து இந்த சத்திரசிகிச்கை செய்யப்பட்டது. இவரது வயிற்றில் உள்ள திசு பைக்குள் மூன்று வாரங்களிற்கு வைக்கப்பட்டது. சுகமடையவும், ஒரு புதிய இரத்த ஓட்டத்தை ஏற்படுத்தவும் இவ்வாறு செய்யப்பட்டது.
விறாங் றேய்ஸ் என்ற இவரின் கை தற்காலிக வீடான வயிற்றிற்குள் இருந்து வெட்டி வெளியே எடுக்கப்பட்டது.
கடந்த கோடைகாலத்தில் ரயர் ஒன்றை மாற்றிக்கொண்டிருந்த போது ஏற்பட்ட விபத்தில் கையின் முழு பாவனையையும் விறாங் இழந்து விட்டார்.
ஒரு ஓய்வுபெற்ற கால்நடை பண்ணை தொழிலாளியும், பாடசாலை பேரூந்து சாரதியுமான றேய்ஸ் ரெக்சஸ், மிசூறி நகரத்தை சேர்ந்தவர்.
கடந்த யூன் மாதம் டிரெயிலர் ஒன்றின் ரயரை மாற்றிக்கொண்டிருக்கையில் ஜாக் வழுக்கி இவரது கை தடை காப்ப பொருளிற்குள் சுற்றிவிட்டது. வெப்பமான மெட்டல் கையை எரித்து விட்டது. தொற்று ஏற்பட்டு ஆள்காட்டி விரல் துண்டிக்கப்பட்டது.
ஹியுஸ்ரன் மெதடிஸ்ட் வைத்தியசாலை பிளாஸ்டிக் ;அறுவை சிகிச்சையாளர் டாக்டர் அந்தோனி எக்கோ இவரது கையை வயிற்றிற்குள் வைக்க தீர்மானித்து அவ்வாறு செய்து சத்திரசிகிச்சை நடந்து றேய்ஸ் குணமடைந்து வருகின்றார்.

manman1man2man3man4

– See more at: http://www.canadamirror.com/canada/48745.html#sthash.f38T0iY5.dpuf

SHARE