கொள்ளையடிக்க வந்த திருடர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்”: ஏழை விவசாயிக்கு நீதிபதி அதிரடி தீர்ப்பு

279

 

 

பிரான்ஸ் நாட்டில் வசித்து வரும் ஏழை விவசாயி ஒருவரின் வீட்டில் கொள்ளையடிக்க வந்த திருடர்களுக்கு அந்த விவசாயி இழப்பீடு வழங்க வேண்டும் என நீதிபதி தீர்ப்பளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்மேற்கு பிரான்ஸ் நாட்டில் உள்ள Pau என்ற சிறிய கிராமத்தில் ஏழை விவசாயி ஒருவர் வசித்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த யூலை மாதம் இவரது வீட்டிற்கு 2 கொள்ளையர்கள் திருடவதற்காக காரில் வந்துள்ளனர்.

விவசாயி வீட்டிற்கு பின்புறம் இருந்த விவசாயம் செய்யும் ஒரு இயந்திரத்தை கொள்ளையர்கள் திருட முயன்றுள்ளனர்.

இதனை பார்த்து அதிர்ச்சியும் கோபமும் அடைந்த விவசாயி கொள்ளையர்களுக்கு தக்க பாடம் கற்ற தர வேண்டும் என நினைத்து களத்தில் இறங்கியுள்ளார்.

பின்னர், தனது வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ‘பொக்ளைன்’ வாகனத்தை கொண்டு திருடர்களின் காரை அடித்து நொறுக்கி சேதப்படுத்தியுள்ளார்.

தங்களுடைய வாகனத்தை சேதாரப்படுத்திய விவசாயி மீது திருடர்கள் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கு தொடர்பான இறுதி விசாரணை கடந்த புதன் கிழமை அன்று நீதிமன்றத்திற்கு வந்துள்ளது.

வழக்கினை விசாரணை செய்த நீதிபதி, ‘கொள்ளையர்களிடம் இருந்து தன்னை காப்பாற்றிக்கொள்ள அவர்களது வாகனத்தை சேதப்படுத்தியது குற்றம்.

எனவே திருடர்களுக்கு விவசாயி 2,400 யூரோ இழப்பீடு வழங்க வேண்டும் என உத்தரவளித்தார்.

மேலும், விவசாயி வீட்டில் கொள்ளையடிக்க சென்ற திருடர்களுக்கு 3 மாத சிறை தண்டனையும், விவசாயிக்கு 450 யூரோ இழப்பீடும் மற்றும் 70 மணி நேரம் பொதுப்பணியும் செய்ய வேண்டும் என நீதிபதி தீர்ப்பு கூறியுள்ளனர்.

நீதிபதி தீர்ப்பினால் ஏமாற்றமும் அதிர்ச்சியும் அடைந்த விவசாயி, ‘கொள்ளையை தடுக்க முயலும் ஒரு ஏழை விவசாயிக்கு இது போன்ற அநியாயமான தீர்ப்பு தான் கிடைக்கும்’ என வேதனை தெரிவித்துள்ளார்.

SHARE