கோபம் கொண்ட இஷாந்த சர்மா: உணர்ச்சியை கட்டுப்படுத்த சொன்ன கவாஸ்கர்

342
கொழும்பில் நடக்கும் கடைசி டெஸ்ட் போட்டியில் இஷாந்த் சர்மா தனது உணர்ச்சியை கட்டுப்படுத்தியிருக்கலாம் என கவாஸ்கர் கூறியுள்ளார்.வது இன்னிங்சில் விளையாடிய இந்தியா 274 ஓட்டங்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதனால் இலங்கைக்கு 386 ஓட்டங்கள் இலக்காக கொடுக்கப்பட்டது.இந்நிலையில் 9வது விக்கெட்டாக உமேஷ் யாதவ் ஆட்டமிழந்ததும் கடைசி விக்கெட்டிற்கு இஷாந்த் சர்மா களம் இறங்கினார்.அப்போது அவருக்கு தமிங்க பிரசாத் பந்து வீசினார். இஷாந்த் சர்மாவை விரைவில் வீழ்த்துவதற்காகவும், அடுத்து பந்து வீச வரும் அவரை மனதளவில் பாதிக்கவும் பிரசாத் அதிகப்படியாக பந்தை பவுன்சராக வீசினார்.

இஷாந்த் சர்மா குனிந்து அந்த பந்துகளை விட்டுவிட்டார். பின்னர் ஒரு ஓட்டம் எடுத்து அவர் மறுமுனைக்கு வரும் போது தன்னுடைய ஹெல்மெட்டை தட்டிக்கொண்டு பிரசாத்துடன் கடுமையான வாக்குவாத்தில் ஈடுபட்டார்.

இதனால் பிரசாத்துக்கு ஆதரவாக சந்திமால் வாக்குவாதம் செய்தார். இதைத் தொடர்ந்து அஸ்வினும் இஷாந்த் சர்மாவிற்கு ஆதரவாக வாக்குவாத்தில் ஈடுபட்டார்.

மாறிமாறி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் உடனே மைதான நடுவர் தலையிட்டு பிரச்சனையை முடித்து வைத்தார்.

இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த இந்திய முன்னால் அணித்தலைவர் சுனில் கவாஸ்கர், இஷாந்த் சர்மாக தனது உணர்ச்சியை வெளிக்காட்டியது மிகவும் சிறந்தது.

ஆனால், இந்தியாவின் முன்னணி பந்துவீச்சாளராக இருக்கும் அவர், தனது உணர்ச்சியை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

SHARE