கோஹ்லியால் டோனிக்கு வந்த சோதனை! தென் ஆப்பிரிக்க தொடரில் காத்திருக்கும் சவால்

319
விராட் கோஹ்லியால் இந்திய அணித்தலைவர் பதவியை பாதுகாத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் டோனி.ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கு தலைவராக வலம் வந்து கொண்டிருந்தார் டோனி.

இரண்டு உலகக்கிண்ணம், சாம்பியன் டிராபி என ஐ.சி.சி கிண்ணங்களை வென்று சாதனை படைத்த டோனி, டெஸ்ட் அரங்கிலும் இந்திய அணியை தரவரிசையில் நம்பர்-1 இடத்தில் வைத்து அழகு பார்த்தார்.

இந்நிலையில் தொடர் தோல்வி டோனியை துரத்த அவுஸ்திரேலிய டெஸ்ட் தொடரோடு டோனி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். இதனால் எளிதாக துணை தலைவர் கோஹ்லி, டெஸ்ட் போட்டியின் தலைவரானார்.

இதற்கு ஏற்றார் போல் கோஹ்லி சமீபத்தில் இலங்கை மண்ணில் 22 ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்ட் தொடரை கைப்பற்றினார். இதனால் டோனியின் ஒருநாள் மற்றும் டி20 தலைவர் பதவிக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தென் ஆப்பிரிக்க தொடரில் கோஹ்லியை தலைவராக நியமிக்க ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியது.

மேலும், டோனியின் திட்டமிடல் திறமை குறைந்து விட்டதாகவும் விமர்சனம் எழுந்துள்ளது. இதற்கு உலகக்கிண்ணத் தோல்வி, வங்கதேசத்திடம் வீழ்ந்தது ஆகியவை காரணமாக கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து டோனி அனைத்து வித தலைவர் பொறுப்பையும் கோஹ்லியிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

இதனால் டோனி அடுத்த மாதம் தொடங்கவிருக்கும் தென் ஆப்பிரிக்க தொடரில் தனது அணித்தலைவர் திறமையை மீண்டும் நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.

SHARE