கோஹ்லி வெற்றிகளை குவிக்க.. டோனி என்ன செய்து கொண்டிருக்கிறார்?

284

இந்திய கிரிக்கெட் அணியின் ஒருநாள் போட்டி தலைவர் டோனி முதன்முறையாக வெளிநாட்டு நிறுவனம் ஒன்றுடன் ஒப்பந்தம் செய்துள்ளார்.

Grand Midwest Group என்ற துபாய் நிறுவனம் 3 ஆண்டுகளுக்கு டோனியை தனது நிறுவனத்தின் தூதுவராக ஒப்பந்தம் செய்து உள்ளது.

துபாய், அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளில் ஹொட்டல், மருத்துவமனை போன்ற பலவற்றை நிர்வகித்து வரும் அந்த நிறுவனம் துபாயில் பல உள்ளூர் கிரிக்கெட் அணிகளையும் கொண்டுள்ளது.

இது தொடர்பாக வெளியான செய்திக் குறிப்பில், “டோனி, Grand Midwest Group நிறுவனத்தின் தூதுவராக செயல்பட பல மில்லியன் டொலர் மதிப்பிலான ஒப்பந்தம் 3 ஆண்டுகளுக்கு செய்யப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டப்பட்டுள்ளது.

இது பற்றி டோனி கூறுகையில், “இந்தியாவுக்கு வெளியில் இது எனது முதல் ஒப்பந்தம். இதற்காக அந்த நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். அவர்களுடன் இணைந்து பணியாற்ற ஆவலாக இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

டெஸ்ட் போட்டிகளில் இருந்து டோனி ஓய்வு பெற்று விட்டார். இதனால் இது போன்ற நடவடிக்கைகளில் அவர் இறங்கியுள்ளார்.

அதே சமயம் டெஸ்ட் அணித்தலைவரான கோஹ்லி இலங்கை அணிக்கு எதிரான தொடரை தொடர்ந்து, தற்போது சொந்த மண்ணில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியுள்ளார்.

SHARE