கௌரவ உறுப்பினர்களே!!! -வைத்திய கலாநிதி சி.சிவமோகன் பாராளுமன்ற உறுப்பினர்

277

 

கௌரவ உறுப்பினர்களே!!!
தயவுடன் உங்கள் பரிசீலனைக்காக பின்வரும் விடயங்களை சுருக்கமாக சமர்பிக்கின்றேன்.
dcp646434
 
வன்னி மாவட்டத்தின் அபிவிருத்தி
கொடூர யுத்தத்தின் எதிலிகளாக விடப்பட்ட எமது மக்களுக்கு வாழ்வாதாரம் என்பது இன்று சவால்களுக்குள்ளாக்கப்ட்டுள்ளது என்பது தாங்கள் அறிவீர்கள். எமது தேசிய விடுதலையானது முக்கியமானது என்பது நாம் அனைவரும் அறிவோம். அதே போல் எமக்கு வரும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை புறந்தள்ளிவிட்டு மக்களுக்கான வாழ்வாதாரங்களையும் அசட்டை செய்துவிட்டு எமது மக்களை அனாதரவாக விடப்போகின்றோமா என்பதை சிந்திக்க வேண்டியவர்களாக நாங்கள் உள்ளோம். எமக்கு வரும் ஒவ்வொரு வேலைத்திட்டங்களையும் புறந்தள்ளுவோம் எனின் புதிதாக அபிவிருத்தி வேலைத்திட்டங்களை பாராளுமன்றத்தில் கோரும் தார்மீக உரிமையில் ஒரு கேள்விக்குறி எழுவது தவிர்க்க முடியாததாகிறது.
 
கௌரவ முதலமைச்சரால் குறிப்பிடப்பட்ட நிபுனர்குளு அறிக்கை பொய்யானதா?
 
பின்வரும் விடயங்கள் கவனத்தில் எடுக்கப்பட வேண்டியவை
1. ஒப்பம் திகதியிடப்படாத அறிக்கையை ஏன் முதலமைச்சர் எமக்கு தந்தார்
2. தனி ஒரு நபரால் தயார் செய்யப்பட்டது (விவசாய அமைச்சின் ஒரு அதிகாரியால் வற்புறுத்தலின் பேரில் தயார் செய்யப்பட்டதா?)
3. அதில் பெயரிடப்பட்டவர்களில் சிலர் தாம் ஒப்பமிடவில்லை, தயார் செய்யவில்லை என்கிறார்கள்
4. ஏன் வடமாகாண சபையின் விவாதத்திற்கு சமர்பிக்கப்படவில்லை
இது சரியா? தவறா? என்பதை அறிய இது பகுப்பாய்விற்கு உட்படுத்தப்பட வேண்டியது
 
அடையாளம் காணாத காணியுடன் மாய விளையாட்டு வேண்டாம்
 
இன்று வரை நாம் அனைவருக்கும் பொருத்தமான காணியை ஓமந்தையில் அடையாளம் காண்பதில் தவறி நிற்கின்றோம் என்பதுதான் உண்மை
1. ஒரு காணி ரயில் பாதையின் குறுக்காக சென்றுதான் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்ற நிலை உள்ளது. இதில் இலகுவான போக்குவரத்திற்கு தடைகள் உள்ளது என்பதை நீங்கள் உணாவீர்கள்
2. மற்றைய காணி இன்றுவரை சுவீகரிப்பு நடவடிக்கை எடுக்கப்படாததால் ஒரு வருட மேலதிக காலவகாசம் தேவையாக உள்ளது. அதுவும் மத்திய அபிவிருத்தி வகுப்புக்காணி என்பதால் நீதிமன்ற தடைக்கு உட்படாது என்பதற்கு எந்தவித உத்தரவாதமும் இல்லை
 
வடமாகாண சபை பிரேரணையை மதிப்போம்
 
இது தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிறைவேற்றப்பட்ட சட்டரீதியான ஒரு பிரேரணை. விசேடமாக வடமாகாண சபையின் ஒரு பிரேரணை, அதுவும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்;ட ஒரு பிரேரணை. அதனை 06 மாத காலத்திற்கு மறுதலிக்க சட்டத்தில் இடமில்லை. எனவே எமது பிரேரணையை நாங்கள் மதிக்கவில்லை எனின் அதில் ஒவ்வொரு மாகாண சபை உறுப்பினர்களின் கூட்டுப்பொறுப்பில் இருந்து தவறியவர்களாகிவிடுவோம்.
பிரேரனையை நிறைவேற்றிய அன்றே ஓமந்தையில் காணியை அடையாளம் கண்டு பொறுப்பானவர்கள் நிறைவேற்றியிருந்தால் நாம் இன்று அல்லல்படவேண்டிய தேவை இருந்திராது.
எனவே ஒன்றை தட்டிவிடுவதற்கு இலகுவாக பல காரணங்கள் சொல்லிவிடலாம். ஆனால் அதை செயல்படுத்துவதற்கு பாரிய உடல், மனோபலம் தேவைப்படும்.
 
வகுப்புவாதங்களை உதறித்தள்ளுவோம்
 
பொய்யான தகவல்களை இலகுவாக மக்களிடையே பரப்பி வகுப்பு வாதங்களை ஏற்படுத்துவது சுலபமானது அதைவிடுத்து உண்மையை மக்களிடையே கூறி யதார்த்தத்தை செயல்படுத்த முன்வருவோம்.
 – வடமாகாண சபை தீர்மானத்தை மதிப்போம்
 – 2000 மில்லியன் வேலைத்திட்டத்தை உடன் ஆரம்பிப்போம்
 – வகுப்பு வாதங்களை உதறித்தள்ளுவோம்
 – தமிழ் தேசிய கூட்டமைப்பை வலுப்படுத்துவோம்
 
 
வைத்திய கலாநிதி சி.சிவமோகன்
பாராளுமன்ற உறுப்பினர் – வன்னி மாவட்டம் மற்றும்
இணைத் தலைவர் – ஒருங்கிணைப்புக் குழு
முல்லை மாவட்டம்
SHARE