சங்கக்காராவின் ஆதிக்கம் இங்கிலாந்திலும் தொடர்கிறது…

369

 

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் கவுண்டி போட்டியில், சரே அணியில் விளையாடி வரும் இலங்கை அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் சங்கக்காரா சதம் விளாசினார். சமீபத்தில் நடைபெற்ற உலகக்கிண்ணத் தொடரோடு சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து சங்கக்காரா ஓய்வு பெற்றார். இதைத் தொடர்ந்து இங்கிலாந்து உள்ளூர் அணியான சரேயில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டார். உலகக்கிண்ணத் தொடரில் தொடர்ச்சியாக 4 சதங்களை அடித்து சாதனை படைத்த சங்கக்காரா, அந்த அணியிலும் சதம் அடித்தார். அவர் 149 ஓட்டங்கள் (21 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தார். ஸ்டீபன் டேவிஸ் (200) உடன் இணைந்து அந்த அணிக்கு வலுவான நிலையை அமைத்து கொடுத்தார். இதனால் அந்த அணி முதல் இன்னிங்ஸில் 563 ஓட்டங்களை குவித்தது.

SHARE