சங்கக்காராவை செல்வாக்குள்ள கிரிக்கெட் வீரர் என்று கூற இயலாது: முத்தையா முரளிதரன்

315
சங்கக்காராவை இலங்கையின் செல்வாக்குள்ள கிரிக்கெட் வீரர் என்று கூற இயலாது என்று முன்னாள் சுழற்பந்து ஜாம்பவான் முரளிதரன் கூறியுள்ளார்.இலங்கை அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் 2வது இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி இந்திய அணியின் வெற்றிக்கு உதவினார்.

இதுவரை நடந்த 2 டெஸ்டிலும் சேர்த்து அவர் 17 விக்கெட்களை கைப்பற்றி உள்ளார்.

இந்நிலையில் இலங்கை ஆடுகளத்தில் அஸ்வினின் பந்துவீச்சு மிகவும் அபாரமாக இருப்பதாக இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீரர் முரளிதரன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் கூறுகையில், “அஸ்வின் சிறப்பாக செயல்படுகிறார். அவரது பந்து நன்றாக எகிறுகிறது. சங்கக்காராவை அவர் ஆட்டமிழக்க செய்தது சிறப்பாக இருந்தது.

அவரால் இன்னும் 10 ஆண்டுகள் விளையாட முடியும். அஸ்வின் 100 டெஸ்டுகள் வரை விளையாடினால் 600 முதல் 700 விக்கெட்டுகளை கைப்பற்றுவார் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், அர்ஜூன ரணதுங்கா எங்களுக்கு நம்பிக்கையை ஊட்டியவர். அவருக்கு நாங்கள் அதிகமாக கடைமைப்பட்டிருக்கிறோம். கிரிக்கெட் வரலாற்றில் இலங்கை அணிக்கு ஒரு அடையாளத்தை கொடுத்தவர்.

அவர் தான் இலங்கையின் செல்வாக்கு மிக்க வீரர். சங்கக்காராவை செல்வாக்குள்ள கிரிக்கெட் வீரர் என்று கூற இயலாது. அவர் ஒரு திறமையான வீரர். அதே போல் ஜெயவர்த்தனேவும் சிறந்த வீரர்.

மேலும், சனத் ஜெயசூரியா, அரவிந்த டி சில்வா ஆகியோர் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது” என்று கூறியுள்ளார்.

SHARE