சங்கக்காராவை வாழ்த்திய கிளார்க்.. கிளார்க்கை புகழ்ந்த சங்கக்காரா: டுவிட்டரில் நெகிழ்ச்சி நிகழ்வு

359
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற சங்கக்காராவும், கிளார்க்கும் தங்களது வாழ்த்துக்களை டுவிட்டரில் பகிர்ந்து கொண்டனர்.அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தலைவரான மைக்கேல் கிளார்க் ஆஷஸ் தொடரில் ஏற்பட்ட மோசமான தோல்வியைத் தொடர்ந்து, ஆஷஸ் போட்டி முடியும் போது டெஸ்ட் போட்டியில் இருந்து விடைபெறுவதாக அறிவித்திருந்தார்.அதே போல் இலங்கை அணியின் முன்னாள் தலைவரான குமார் சங்கக்காராவும் இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியோடு ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார்.

அதன்படி, சங்கக்காராவும், கிளார்க்கும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விடைபெற்றனர். இருவரும் டுவிட்டரில் பரஸ்பரம் வாழ்த்துக்களை பறிமாறிக்கொண்டனர்.

மைக்கேல் கிளார்க் கூறுகையில், “ஒரு அற்புதமான கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது. சங்கா ஒரு மிகச்சிறந்த வீரர் மட்டும் அல்ல சிறந்த மனிதரும் கூட. வாழ்த்துக்கள் சங்கா” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு பதில் அளித்த சங்கக்காரா, “நீங்கள் ஒரு அற்புதமான துடுப்பாட்ட வீரர். அதேசமயம் மற்றவர்கள் பின்பற்றத்தக்க சிறந்த தலைவர்” என தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

SHARE