சசிகலாவின் கணவர் நடராஜன் முள்ளிவாய்க்கால் சிக்கலில் திடீர் கைது!

406

தஞ்சாவூர் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் சிற்பங்கள் அமைக்கும் விவகாரத்தில் தமக்கு கொலை மிரட்டல் விடுத்தார் என்ற கராத்தே வீரர் ஹூசைனியின் புகாரின் பேரில் சசிகலாவின் கணவர் நடராஜனை போலீசார் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் விளார் கிராமத்தில் ஈழத் தமிழர் துயரை விவரிக்கும் முள்ளிவாய்க்கால் முற்றம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த முற்றத்தில் சிற்பங்களை அமைக்க ஹூசைனியிடன் நடராஜன் முன்பணம் கொடுத்திருந்தார்.

ஆனால் குறிப்பிட்ட காலத்துக்குள் ஹுசைனி சிற்பங்களை முடித்துதராமல் ஏமாற்றுகிறார் என்று முள்ளிவாய்க்கால் முற்றம் தரப்பினர் சென்னை போலீசில் புகார் கொடுத்தார். இதைத் தொடர்ந்து தமக்கு தர வேண்டிய பாக்கி பணத்தை கேட்கப் போன போது சசிகலா நடராஜன் தம்மை துப்பாக்கியைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்தார் என்று ஹூசைனியும் ஒரு புகார் கொடுத்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் நடராஜனை சென்னை போலீசார் இன்று குற்றாலத்தில் கைது செய்துள்ளனர். கடந்த 2012ஆம் ஆண்டு தஞ்சாவூர் விளார் கிராமத்தில் நில அபகரிப்பு தொடர்பான வழக்கில் நடராஜன் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE