சசிகலா புஷ்பா விவகாரத்தில் “பிலால்” ஆனந்த்சர்மா – திடுக்கிடும் தகவல்

261

சசிகலா புஷ்பா விவகாரத்தில் “பிலால்” “ஆனந்த்சர்மா”…… புதிய தகவல்கள்அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ராஜ்யசபா எம்.பி. சசிகலா புஷ்பாவுக்கு மிக நெருக்கமானவராக பிலால் என்பவரும் இருந்ததாக புதிய தகவலும் படங்களும் வெளியாகி உள்ளன. அத்துடன் காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா கொடுத்த ஐடியாவின் பேரில்தான் ராஜ்யசபாவில் ஜெயலலிதா தம்மை அடித்ததாக சசிகலா புஷ்பா பேசியதாகவும் கூறப்படுகிறது. டெல்லி விமான நிலையத்தில் திமுக எம்பி திருச்சி சிவாவை சரமாரியாகத் தாக்கினார் அதிமுகவில் எம்பியாக இருந்த சசிகலா புஷ்பா. இந்த விவகாரம் குறித்து முதல்வர் ஜெயலலிதா சசிகலா புஷ்பாவிடம் விசாரணை நடத்தினார். ஆனால் ராஜ்யசபாவில் பேசிய சசிகலா புஷ்பாவோ, ஜெயலலிதா என்னை அறைந்தார்; எம்பி பதவியை ராஜினாமா செய்யுமாறு நெருக்கடி கொடுக்கிறார் என கதற பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் உடனடியாக அதிமுகவில் இருந்து சசிகலா புஷ்பா நீக்கப்பட்டார். இதனிடையே சசிகலா புஷ்பா விவகாரம் தொடர்பாக நக்கீரன் இதழ் சில தகவல்களை வெளியிட்டுள்ளது. அதில் அதிமுக தலைமைக் கழக நிர்வாகி பிலால் என்பவருடன் சசிகலா புஷ்பா நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன. நக்கீரன் வெளியிட்ட சசிகலா புஷ்பா தொடர்பான புதிய படங்கள்: நக்கீரன் இதழில் இடம்பெற்றுள்ள தகவல்கள்: தாது மணல் தொழிலதிபர் வைகுண்டராஜன் மூலமே சசிகலா மேயராக, எம்பியானாராம். அதிமுக தலைமைக் கழக நிர்வாகி பிலாலுக்கும் சசிகலா புஷ்பாவுக்கும் திருமணம் நடைபெற்றதாம். திருச்சி சிவாவுடன் சசிகலா புஷ்பா நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டதும் பிலால்தானாம். சசிகலா புஷ்பாவின் நண்பர் காவ்யா மூலமே பிலால் கைக்கு இந்த படங்கள் கிடைத்ததாம் திருச்சி சிவாவுக்கும் சசிகலா புஷ்பாவுக்கும் “கமிஷன்” கொடுப்பதில் தகராறு இருந்துள்ளது. இதில் ஏற்பட்ட பஞ்சாயத்துதான் ஏர்போர்ட் அடிதடியாம்.. சசிகலா புஷ்பாவை ஜெயலலிதா விசாரித்த போது சசிகலாவும் உடனிருந்தாராம். திருச்சி சிவாவுடனான சசிகலா புஷ்பாவின் நெருக்கம் குறித்து தங்களுக்கு முன்னரே தெரியும் என ஜெயலலிதா, சசிகலா இருவரும் கூறினார்களாம்… போயஸ் கார்டனில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட சசிகலா புஷ்பா, ரகசிய எண்ணில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த் சர்மாவை தொடர்பு கொண்டாராம். ஆனந்த் சர்மாவின் ஆலோசனைப்படிதான் ராஜ்யசபாவில் ஜெயலலிதா தம்மை அடித்ததாக புகார் கூறினாராம்.

 

SHARE