சச்சின் சாதனையை முறியடித்த அலெஸ்டர் குக்

337
இங்கிலாந்து அணித்தலைவர் அலெஸ்டர் குக் குறைந்த வயதில் டெஸ்ட் போட்டிகளில் 9 ஆயிரம் ஓட்டங்களை கடந்து சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்துள்ளார்.நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் அலெஸ்டர் குக் 9 ஆயிரம் ஓட்டங்கள் என்ற மைல்கல்லை எட்டினார். இவர் இந்த சாதனையை 30 வயது 159 நாட்களில் படைத்தார்.

இதே சாதனையை சச்சின் 30 வயது 253 நாட்களில் தான் படைத்திருந்தார். அந்த வகையில் 94 நாட்களில் சச்சினை முந்தியுள்ளார் குக்.

குக் 9 ஆயிரம் ஓட்டங்களை கடக்க 204 இன்னிங்சை எடுத்துக் கொண்டார். ஆனால் சச்சின் இந்த மைல்கல்லை 179 இன்னிங்சிலே எட்டி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE