சச்சின் டெண்டுல்கர் பெயரில் கிரிக்கெட் மைதானம்!

330
கேரளாவில் உள்ள கிரிக்கெட் மைதானத்திற்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் பெயர் சூட்டப்படவுள்ளது.தற்போது வயநாட்டில் புதிய கிரிக்கெட் ஸ்டேடியம் கட்டப்பட்டு வருகிறது. இதன் கட்டுமான பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது.

இந்நிலையில் இந்த மைதானத்திற்கு அல்லது கேரள கிரிக்கெட் சங்கத்தின் கீழ் அமைக்கப்படவுள்ள புதிய மைதானத்திற்கு சச்சினின் பெயர் சூட்டப்படும் என்று கேரள கிரிக்கெட் சங்கத் தலைவர் மேத்யூ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சச்சினுடன் பேசி முடிவெடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொச்சியில் உள்ள ஜவஹர்லால் நேரு மைதானத்தில், வீரர்கள் பெவிலியனுக்கு ஏற்கனவே சச்சின் டெண்டுல்கர் பெயர் சூட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

SHARE